Top
undefined
Begin typing your search above and press return to search.

கோத்தபய ராஜபக்சேவெற்றிக்கு கருத்து சொல்லி, சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட மு.க.ஸ்டாலின்! ஆதாரங்களைஅடுக்கி, திமுகவையே “கைமா” செய்த நெட்டிசன்கள்!!

கோத்தபய ராஜபக்சேவெற்றிக்கு கருத்து சொல்லி, சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட மு.க.ஸ்டாலின்! ஆதாரங்களைஅடுக்கி, திமுகவையே “கைமா” செய்த நெட்டிசன்கள்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Nov 2019 2:52 PM GMT


2009-ஆம் ஆண்டு, இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்திற்கும் இடையே நடந்த இறுதிகட்ட போரில், 175000 அப்பாவித் தமிழர்கள் ஈவு, இரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டனர்.


அப்போது இலங்கை அதிபராக இருந்தவர் மகிந்த ராஜபக்சே. ராணுவ செயலராக இருந்து சிங்கள ராணுவத்தை வழிநடத்தியவர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே.


இந்த கோத்தபய ராஜபக்சேதான் இலங்கையின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டபோது, இந்தியாவில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி நடந்தது. அந்த கூட்டணியில் திமுக மிகப்பெரும் சக்தியாக விளங்கியது. தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். திமுகவின் ஆதரவு இல்லாவிட்டால் மத்திய காங்கிரஸ் அரசு, 24 மணி நேரம்கூட தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலை அன்று இருந்தது. தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி இருந்தார்.


அப்போது கருணாநிதி நினைத்திருந்தால், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்று, மத்திய காங்கிரஸ் அரசையே கவிழ்த்து இருக்கலாம். ஆனால் கருணாநிதி அப்படி எதையும் செய்ய முன்வரவில்லை.


உலகிலுள்ள ஒட்டுமொத்த தமிழர்களும், தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒரே குரலில் இலங்கையில் போரை தடுத்து நிறுத்துங்கள் என்று கருணாநிதியிடம் மன்றாடினார்கள். ஆனால் கருணாநிதியின் மனம் இரங்கவில்லை. அங்கே தமிழ் இனம் அழிக்கப்பட்டது. இங்கே திமுக – காங்கிரஸ் கும்பல் மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.


இலங்கையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்த செய்தி தினத்தந்தியில் முதல் பக்கத்தில் வெளியானது. அந்தச் செய்திக்கு கீழே, “மத்திய மந்திரிசபையில் திமுகவுக்கு எத்தனை மந்திரிகள் என்று சோனியாவுடன் பேசியபின் முடிவு செய்யப்படும்” என்ற கருணாநிதியின் பேட்டி இடம்பெற்றிருந்தது.
https://twitter.com/sribalajipriya/status/1196351446322532353


அங்கே தமிழ் இனம் அழிக்கப்பட்டபோது. இங்கே மத்திய மந்திரிசபையில் திமுகவின் சார்பில் அழகிரி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா போன்றோருக்கு முக்கிய இலாகாக்களை பெறுவதிலேயே கருணாநிதி குறியாக இருந்தார். அவர் நடக்க இயலாத நிலையில் இருந்த போதும்கூட, டெல்லி சென்று, முக்கிய இலாகாக்கள் தரவில்லை என்றால் அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என்று சோனியாவை மிரட்டினார்.


அந்த மிரட்டலை ஈழத்தமிழர்களுக்காகவும் விட்டுருந்தால், தமிழ் இனம் காக்கப்பட்டிருக்கும். இது, ஈழத்தமிழர்களுக்கு, திமுக செய்த உச்சபச்ச துரோகம். இது இன்னமும் ஒட்டுமொத்த தமிழர்கள் இதயத்திலும் ஆறாத வடுவாக இருந்து வருகிறது.


அப்போது இலங்கையில் போர்நிறுத்தத்தை அறிவிக்க உண்ணாவிரதம் என்ற பெயரில், முதல்வர் கருணாநிதி ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். அதுவும் காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடையே நடந்த ஒரு மோசடி உண்ணாவிரதப்போராட்டம்.
https://twitter.com/itsudhayaa/status/1196360250850308098


இலங்கை அரசுக்கு இந்திய அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை என்றெல்லாம் அப்போது திமுக பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டது. ஆனால் 2018-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், “விடுதலைப்புலிகளை வீழ்த்த, இந்தியா எங்களுக்கு உதவியது” என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே வெளிச்சம் போட்டு காட்டினார்.
https://twitter.com/arivalayam/status/1196350273448546305


இதெல்லாம் திமுக, தமிழினத்திற்கு செய்த மாபெரும் துரோகங்கள் என்பது வரலாற்றில் பதியப்பட்டு விட்டன.


இந்த சூழ்நிலையில், இலங்கையில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட கோத்தபய ராஜபக்சே, வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கிறேன் என்ற போர்வையில், அறிக்கை ஒன்றை மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, அதனை திமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.


இந்த டுவிட்டர் பதிவு வெளியான சில மணி துளிகளில், ஒட்டுமொத்த தமிழர்களும் பொங்கி எழுந்து விட்டார்கள். அவர்கள், தமிழினத்திற்கு திமுக, என்ன என்ன துரோகங்களை எல்லாம் செய்துள்ளது என்பதை வரிசைப்படுத்தி பட்டியலிட்டு உள்ளார்கள்.
https://twitter.com/Kumar21079504/status/1196364235451682816


கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம், பிரபாகரன் மரணம் தொடர்பான செய்தியும் அதே பக்கத்தில், மத்திய அரசில் முக்கிய இலாகாக்களை பெறுவது தொடர்பான கருணாநிதியின் பேட்டி, கனிமொழி, திருமாவளவன் போன்றவர்கள் தமிழர்களை கொன்று புதைத்த ராஜபக்சேவிடம் பரிசில் பெறும் காட்சிகள், விடுதலைப்புலிகளை வீழ்த்த இந்தியா உதவியது என்று ராஜபக்சே கூறிய பத்திரிகை ஆதாரங்கள், ராஜபட்சே விருந்தினராக சென்ற கனிமொழி, திருமாவளவன், டி.ஆர்.பாலு உள்பட எம்பிக்கள் ராஜபக்சே விருந்தில் வயிறார சாப்பிட்டு விட்டு, சந்தோஷமாக பேசி மகிழ்ந்த போட்டோக்கள் என்று இந்தப் பட்டியல் நீளுகிறது.
https://twitter.com/goldrajen/status/1196359118170148864


இதேபோல இலங்கையில் இன அழிப்புக்கு துணைபோன கருணாநிதி, ஸ்டாலினை வைகோ, தோலுரித்து காட்டியதும், பின்னர் திமுகவிடமே அவர் சரணாகதி அடைந்தபோது பல்டி அடித்து பேசிய வீடியோக்களையும் பதிவிட்டு உள்ளனர்.
https://twitter.com/Ravi48586096/status/1196364070334558208


இதுபோல இலங்கை இன அழிப்பு தொடர்பாக, ஜான் பாண்டியனின் பேட்டி போன்றவற்றையும் இணைத்துள்ளனர்.
https://twitter.com/Ravi48586096/status/1196365660097400833


இது ஒருபுறம் இருக்க, இலங்கையில் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான ஜெகத்ரட்சகன், 29,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கி உள்ள தொழிற்சாலைக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதில் ஸ்டாலின் மிகத்தெளிவாக இருந்துள்ளார்.


அதனால்தான், ஸ்டாலின் தனது அறிக்கையில், கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டது “தமிழர்கள் வரலாற்றில் கறைபடிந்த நாள்”, “கருப்பு நாள்”, “துக்க நாள்” போன்ற எந்த அமங்கல வார்த்தையையும் பயன்படுத்தவில்லை.


இதையும் நெட்டிசன்கள் விட்டு வைக்கவில்லை. இன்னும் சிலர் “நல்ல நல்ல” வார்த்தைகளால் ஸ்டாலினை அர்சனை செய்து வருகின்றனர்.


Next Story