Top
undefined
Begin typing your search above and press return to search.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் - அதிரடி நீக்கம்!

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் - அதிரடி நீக்கம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Nov 2019 9:58 AM GMT


சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தீட்சிதர் தர்ஷனை கோவில் பூஜை நடவடிக்கைகளில் இருந்து 2 மாதத்துக்கு தீட்சதர்கள் நிர்வாக சபை சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளது.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி வீதியை சேர்ந்தவர் லதா. இவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார். தனது மகனின் பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள பிரபல நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.


அப்போது கோயில் பிரகாரத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்ய தேங்காய் மற்றும் பழ தட்டை லதா கொடுத்துள்ளார் என்றும் ஆனால் தீட்சிதர் வெறும் தேங்காயை உடைத்துவிட்டு அர்ச்சனை செய்யாமல் திருப்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தீட்சிதரிடம் லதா கோபமாக கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தீட்சிதரும் கடும் வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் மனம் உடைந்த லதா செல்போன் மூலம் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரை அழைத்து வந்து தீட்சிதரிடம் இது குறித்து காரசாரமாக பேசியதாக தெரிகிறது.






இரு தரப்புக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட இந்த சம்பவம் தொடர்பாக லதா தரப்பில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரில் தீட்சிதர் தன்னை தாக்கியதாகவும், ஆபாசமாக பேசியதாகவும், மிரட்டல் விடுத்து பேசியதாகவும் அளிக்கப்பட்டுள்ள புகாரை அடுத்து, போலீசார் தீட்சதர் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசியது, மிரட்டல் விடுத்தது, பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


இந் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் நிர்வாக சபையின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பாலகணேசன், புகார் தொடர்புடைய தீட்சிதர் தர்ஷனை இரண்டு மாதம் கோவிலில் பூஜை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளக்கூடாது எனக் கூறியும், அவருக்கு ரூ.5,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.


Next Story