Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் அரசு இடங்களில் கருணாநிதி சிலை வைக்க அனுமதி இல்லை - கவர்னர் கிரண்பேடி திட்டவட்டம்!

புதுச்சேரியில் அரசு இடங்களில் கருணாநிதி சிலை வைக்க அனுமதி இல்லை - கவர்னர் கிரண்பேடி திட்டவட்டம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Nov 2019 6:19 AM GMT


மறைந்த தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு புதுவையில் சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். சிலை அமைப்பு தொடர்பான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பொது இடங்களில் சிலை அமைக்க தடை விதித்துள்ளதை சுட்டிக் காட்டிய கவர்னர் கிரண்பேடி சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தலைமை செயலாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான புகார் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


மேலும் அவர் கூறும் போது, 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் லோதா, முகோபாத்யாயா ஆகியோர் கொண்ட பெஞ்சு அளித்த தீர்ப்பில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் சிலைகள் வைப்பதோ, மதம் சம்பந்தமான கட்டுமானங்கள் செய்வதோ கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.


அந்த தீர்ப்பை புதுவை மாநில தலைமை செயலாளர் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் தனியார் நிலத்தில் மட்டுமே சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இது முதல்வர் நாராயணசாமி மற்றும் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story