Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜே.என்.யூ வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை உடைப்பு ! மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள் கண்டனம்!

ஜே.என்.யூ வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை உடைப்பு ! மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள் கண்டனம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Nov 2019 5:42 AM GMT


டெல்லி ஜேஎன்யு வளாகத்தில் சென்ற வாரம் சுவாமி விவேகானந்தரின் சிலை திறக்கப்பட தயார் நிலையில் இருந்தது. இந்த நிலையில் இடதுசாரி சிந்தனையுடைய சில ஜேஎன்யு மாணவர்கள் விவேகானந்தர் சிலையை அங்கு நிறுவக் கூடாது எனக் கோரி காழ்ப்புணர்ச்சியுடன் அங்கு போராட்டம் நடத்தினர்.


இந்த நிலையில் அங்கு திறப்பதற்காக துணியால் மூடப்பட்டு வைத்திருந்த சிலையின் கால்பகுதியை கற்களால் தாக்கி உடைத்து விட்டனர். மேலும் சிலையை சுற்றிலும் உள்ள பீடத்தின் மேற்பரப்பில் அசிங்கமான வார்த்தைகளை பிஜேபி கட்சியின் பெயருடன் இணைத்து எழுதியும் வைத்துள்ளனர்.





மேலும் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் குறித்து மேற்கோள் காட்டி வகுப்பறைக்குள்  பாடம் நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் ஒருவரையும் அவமதித்ததுடன் அவரை வகுப்பை விட்டு செல்லமுடியாமல் அடைத்து வைத்தனர். ஜே என் யு மாணவர்கள் சிலரின் இத்தகைய அத்துமீறிய மூர்கத்தனமான செயல்களை கண்டித்து நேற்று மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஓன்று சேர்ந்து கண்டன கூட்டம் நடத்தினர்.


இதில் பேராசிரியர்களும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் விவேகானந்தரின் சிந்தனைகள் உலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்றும் அவருடைய தத்துவங்கள் அனைவருக்கும் எல்லா காலங்களிலும் பொருந்தக் கூடியவை என்றும் பேசினர். டெல்லி சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்.


Translated Article From OPINDIA


Next Story