Top
undefined
Begin typing your search above and press return to search.

எல்லை மீறிய திருமாவளவன் கும்பலின் ரவுடித்தனங்கள்! – விடுதலை சிறுத்தைகள் கட்சி தடை செய்யப்படுமா?

எல்லை மீறிய திருமாவளவன் கும்பலின் ரவுடித்தனங்கள்! – விடுதலை சிறுத்தைகள் கட்சி தடை செய்யப்படுமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Nov 2019 10:14 AM GMT


சமீபத்தில் திருமாவளவன், இந்து தெய்வங்களை கேவலமாக பேசினார். இது ஒட்டுமொத்த இந்துக்கள் மனதையும் புண்படுத்தியது. இதுதொடர்பாக தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பல தரப்பில் இருந்தும் திருமாவளவனுக்கு கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.


திருமாவளவனின் இந்த கேகலமான செயலை வேலூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் குணசேகரனும் விமர்சித்துள்ளார். கருணாநிதியின் முரட்டு பக்தனாக இருந்தாலும், அவர், தான் ஒரு இந்து என்ற முறையில் தனது கடமையை செய்துள்ளார்.


இதனால் ஆத்திரம் அடைந்த வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் குண்டா (எ) சார்லஸ், காரை.தமிழ், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், முத்துகடை பகுதியில் காரில் சென்ற பத்திரிகையாளர் குணசேகரனை மறித்து அவரை காரில் இருந்து கீழே இழுத்துபோட்டு அடித்து உதைத்துள்ளனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்து உள்ளனர்.


இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே போலீசாரை அரிவாளை காட்டி வெட்ட முயன்ற விடுதலை சிறுத்தைகள் மாவட்ட தொண்டரணி நிர்வாகி கைது செய்யப்பட்டார். இது நடந்து சில மாதங்கள் முடிவதற்குள், அங்கு பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார்.


இந்த நிலையில் இந்து தெய்வங்களை இழிவாக பேசிய திருமாவளவனை கண்டித்த நடிகை காயத்திரி ரகுராமை திருமாவளவனின் ரவுடி கும்பல்கள், போனில் மிரட்டி உள்ளனர். நள்ளிரவில் அவருக்கு போன் செய்து ஆபாசமாக பேசி உள்ளனர். கொலை மிரட்டலும் விடுத்து உள்ளனர்.


திருமாவளவனின் ரடிவு தம்பிகளின் உருட்டல், மிரட்டல்கள், ரவுடித்தனங்கள் அனைத்தையும் காயத்திரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.


இதுஒருபுறம் இருக்க, சென்னையில் உள்ள காயத்திரியின் வீட்டிற்கு சென்று திருமாவன் கும்பல், ரவுடித்தனம் செய்து மிரட்டி உள்ளது.


திருமாவளவன் கும்பலால், காயத்திரி ரகுநாதன் போன்ற பிரபலமான நடிகைக்கே இந்த நிலைமை என்றால், சமானிய பெண்களின் நிலை எந்த அளவுக்கு பரிதாபமாக இருக்கும் என்பதே இப்போதைய கேள்வி.


பெண்ணியம் பேசும் மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, வைகோ, நக்கீரன் கோபால், சுப.வீரபாண்டியன், முத்தரசன் போன்றோரெல்லாம் இப்போது எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. மாதர் சங்கம் போன்ற பெண்கள் அமைப்புகளை நடத்துபவர்கள் எங்கே பிரியாணி தின்பதற்காக எங்கு சென்றார்கள் என்பதும் தெரியவில்லை.


கட்ட பஞ்சாயத்து, மிரட்டி மாமூல் வசூலிப்பது, அடிதடி செய்வது, கொலை மிரட்டல் விடுப்பது, ரவுத்தனம் செய்வது, அராஜகம் செய்வது, இவைகள்தான் திருமாவளவன் கும்பல்களின் குலத்தொழிலாக உள்ளது. இது நாளுக்குநாள் அதிகரித்து எல்லை மீறி சென்றுவிட்டது.


திருமாவளவன் ஒரே நேரத்தில் மத அமைதியை குலைத்து, மத கலவரத்தை தூண்டும் முயற்சியிலும், தலித் மக்களுக்கும், பிற சமுதாக மக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வேலையிலும் ஈடுபட்டு உள்ளார்.


எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்பதே தமிழகத்தில் அமைதியை விரும்பும் அனைத்து சமுதாய மக்களின் ஒரே எதிர் பார்ப்பாக உள்ளது. இதுதான் தமிழகத்தில் அமைதியை நிலை நாட்ட ஒரே வழியாக இருக்கும்.


Next Story