Top
undefined
Begin typing your search above and press return to search.

சபரிமலை கோவிலில் 10 வயது எனக் கூறி 12 வயது சிறுமி நுழைவு! ஆதார் அட்டை மூலம் தடுத்து நிறுத்தினர்!

சபரிமலை கோவிலில் 10 வயது எனக் கூறி 12 வயது சிறுமி நுழைவு! ஆதார் அட்டை மூலம் தடுத்து நிறுத்தினர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Nov 2019 6:50 AM GMT



சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கோவில் சம்பிரதாயங்கள் படி அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் சென்ற ஆண்டு வேண்டுமென்றே கேரள கம்யூனிஸ்ட் அரசு உச்ச நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மனு செய்து தீர்ப்பு பெற்று அனைத்து வயது பெண்களையும் உள்ளே அனுமதிக்க வழி செய்தது. இதனால் கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் கோபம் அதிகரித்து கேரள மாநிலம் முழுவதும் அரசுக்கு எதிராகவும், தீர்ப்புக்கு எதிராகவும் போராட்டங்களும், வன்முறைகளும் நடை பெற்றன.


இந்த நிலையில் கோர்ட் தற்போது தனது முந்தைய உத்தரவை வாபஸ் பெற்றுக் கொள்ளும் விதமாக பரிசீலனைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. கேரள அரசும் சென்ற ஆண்டுபோல சம்பவங்கள் நடைபெறாதிருக்கவும், ஐயப்ப பக்தர்களுக்கு பயந்தும், தற்போது கோவில் நியதிகளுக்கேற்ப நடந்து வருகிறது.


இந்த நிலையில் புதுவையை சேர்ந்த ஐயப்ப பக்தர் குடும்பம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்று நேற்று கோவிலுக்குள் நுழைந்தது. அப்போது அவர்கள் 10 வயது என விண்ணப்பத்தில் குறிப்பிட்டு ஒரு சிறுமியை உடன் அழைத்து வந்தனர். அந்த சிறுமியை பார்த்து சந்தேகப்பட்ட போலீசார் சிறுமியின் ஆதார் அட்டையை வாங்கி சரி பார்த்ததில் உண்மையில் 12 வயது என தெரியவந்தது. இதை அடுத்து அந்த சிறுமியால் சன்னிதானத்துக்குள் செல்ல இயலவில்லை. பெற்றோர் சந்நிதானம் சென்று திரும்பும் வரை சிறுமி கோவில் அலுவலகத்தில் பாதுகாப்பாக தங்கி இருக்க நேரிட்டது.


இந்த ஆண்டு எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுக்கும் வகையில் 10,000 போலீசார் பம்பையில் குவிக்கப்பட்டுள்ளனர்.  சென்ற ஆண்டு பக்தர்களுக்கு எதிராக விஷமத்தனமாக நடந்து கொண்ட கேரள அரசு இந்த ஆண்டு 'கண்கெட்டப்பின் சூரிய நமஸ்காரம்' என்பது போல திருந்தி தனது நடவடிக்கைகளை மாற்றியுள்ளதாக பக்தர்கள் கூறினர்.  


Translated Article From OPINDIA


Next Story