Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை உட்பட வட தமிழகத்தை ஏமாற்றி வரும் வடகிழக்கு பருவமழை! வழக்கத்தை விட 9 சதவீதம் குறைந்ததாக ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்!

சென்னை உட்பட வட தமிழகத்தை ஏமாற்றி வரும் வடகிழக்கு பருவமழை! வழக்கத்தை விட  9 சதவீதம் குறைந்ததாக ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Nov 2019 11:17 AM GMT



தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், மழைப்பொழிவு, வழக்கத்தை விட, 9 விழுக்காடு குறைந்திருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அடுத்த 2 நாட்களுக்கு, லேசானது முதல் மிதமான மழைக்கும், 7 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக கூறியிருந்தாலும் இன்னும் 2 வாரங்களில் வடகிழக்கு பருவமழை காலம் முடிய உள்ளது.


இந்தநிலையில் இதுவரை போதுமான அளவில் மழை பெய்யாததை அடுத்து சென்னை, புதுவை, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் பகுதிகளில் உள்ள வட தமிழக மக்களுக்கு வரும் காலம் குறித்து கவலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து இந்த பகுதிகள் வறட்சியை அனுபவித்து வருகின்றன.


இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில், வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல், இன்று வரை பதிவான மழைப்பொழிவு குறித்த தகவல்களை வெளியிட்டார்.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், அடுத்த 2 நாட்களுக்கு, வெப்பச்சலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ஒரு சில இடங்களில், லேசானது முதல் மிதமானது வரையில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியிருக்கிறார்.


கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் 8 சென்டி மீட்டரும், காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் 7 சென்டிமீட்டரும் மழைப்பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அனாலும் பலத்த மழை அல்லது புயல் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால் மேற்கண்ட பகுதி மக்கள் ஏமாடர்த்துடன் உள்ளனர். குறிப்பாக விவசாயிகள் ஏமாற்றத்துடன் உள்ளனர்.


Next Story