Top
undefined
Begin typing your search above and press return to search.

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்!

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Nov 2019 7:09 AM GMT


சியாச்சின் பனிமலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ வீரர்கள் 8 பேர் உயிரிழப்பு ,தரையிலிருந்து சுமார் 18 ஆயிரம் அடி உயரமுள்ள பனிமலைப் பகுதியான சியாச்சின், ஜம்மு- காஷ்மீரில் உள்ள இந்திய- பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது,பனிமலையின் பகுதியில், ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அப்பகுதியில் திடீரென கடும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களில் 8 பேர் இந்த பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 8 பேர் உயிரிழப்பு கூறப்படும் நிலையில், மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,அவர்களின் தைரியம் மற்றும் தேசத்திற்கான சேவைக்கு நான் தலைவணக்கம் செலுத்துகிறேன் என அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.


Next Story