Kathir News
Begin typing your search above and press return to search.

#KathirNewsImpact அதிரடி காட்டிய திருச்சி ஆட்சியர் - அசிங்கப்பட்ட உதயநிதி! இந்த அவமானம் தேவையா? நெட்டிசன்கள் கலாய்!

#KathirNewsImpact அதிரடி காட்டிய திருச்சி ஆட்சியர் - அசிங்கப்பட்ட உதயநிதி! இந்த அவமானம் தேவையா? நெட்டிசன்கள் கலாய்!

#KathirNewsImpact அதிரடி காட்டிய திருச்சி ஆட்சியர் - அசிங்கப்பட்ட உதயநிதி! இந்த அவமானம் தேவையா? நெட்டிசன்கள் கலாய்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Oct 2020 8:17 AM GMT

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பொன்மலை அருகில் உள்ள ஆலந்தூரில் ₹6 லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை நிறுவப்பட்டுள்ளது. இது தி.மு.க எம்.எல்.ஏ மகேஷ் பொய்யாமொழியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டது. ஆனால் இதில் எந்த அரசு பொறுப்பிலும் இல்லாத உதயநிதி ஸ்டாலினின் படமும் சேர்க்கப்பட்டது. இது குறித்து கதிர் செய்திகளில் அக்டோபர் 28-ஆம் தேதி "அரசாங்க பணத்தில் உதயநிதிக்கு விளம்பரம் - அப்பன் வீட்டு சொத்தா? நெட்டிசன்கள் சரமாரி கேள்வி!" என்ற தலைப்பில் எழுதி இருந்தோம்.

அதே நேரம் திருச்சி முன்னாள் அ.தி.மு.க எம்.பி குமார் இது குறித்து திருச்சி மாநகராட்சியில் புகார் அளித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது திருச்சி ஆட்சியரின் நடவடிக்கையால் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் அரசு நிழற்குடையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தாத்தாவும், முன்னாள் தமிழக அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் படம் வைக்கப்பட்டுள்ளது.


இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை நெட்டிசன்கள் இந்த அவமானம் தேவையா என்ற தொனியில் கலாய்த்து வருகின்றனர்.

கதிர் செய்திகள் இச்செய்தியை மக்களுக்கு அளித்ததன் மூலமாக இச்சம்பவம் துரித முடிவு எடுக்கப்பட்டதற்கு எங்கள் குழுமம் சார்பாகா நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News