Top
undefined
Begin typing your search above and press return to search.

திருமாவளவனின் முகத்திரையை கிழித்தெறிந்த ராஜபக்சேவின் மகன்!

திருமாவளவனின் முகத்திரையை கிழித்தெறிந்த ராஜபக்சேவின் மகன்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Nov 2019 7:05 AM GMT


இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபட்சே, வெற்றி பெற்றார். 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் மாபெரும் வெற்றியை அடைந்தார்.


அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டதை திருமாவளவன், வைகோ போன்றவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.


இதுதொடர்பாக மஹிந்த ராஜபக்சேவின் மகனும் எம்பியுமான நாமல் ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-





தமிழகத்தின் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கை தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்திப்பதும் இல்லை, அவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யும் வகையில் எந்த ஒரு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்ததும் இல்லை. மாறாக தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக எமது நாட்டு மக்களை பகடைக்காய்களா பயன்படுத்துவதுதான் மிகுந்த வேதனை தரும் உண்மை.


எமது கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே, இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபோது பல நாடுகளின் தலைவர்களும் தமது வாழ்த்துக்களை வழங்கியிருந்தனர்.


தமிழகத்தில் தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக எமது நாட்டில் தமிழ் மக்களை பற்றி அக்கறை உள்ளவர்களாக காட்டி முதலைக் கண்ணீர் வடிக்கும் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் அறிக்கைகளை கண்ணுற்றேன்.





அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலை தவிர அவற்றில் வேறு ஏதுமில்லை. எமது மக்களை பகடைக்காய்களாக்கி, எம் மக்களிடையே பகையையும், துவேஷத்தையும் தூண்டிவிடும் மூன்றாந்தர அரசியலைத் தவிர வேறு என்ன ஆக்கப்பூர்வமான விடயத்தை செய்து இருக்கிறீர்கள் என்ற கேள்வி என்னுள் எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.


2009-இல் யுத்தம் நிறைவடைந்த காலத்தில், மறைந்த தமிழகத்தின் முதல்வர் கருணாநிதியின் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பாராளுமன்ற குழு இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு, வடக்கு - கிழக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவுடன் சினேகபூர்வமான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தமை உலகம் அறிந்த விடயம். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொண்டதுடன், எம்முடன் சினேக பூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், எமது நிலைப்பாடுகளையும் தெளிவுற அறிந்து கொண்டிருந்தார். அத்தகையவர் இன்று இவ்வாறு சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.


எமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும் நல்லெண்ணத்துடன் செயல்படும். தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக்கொள்ள விரும்புவது யாதெனில், நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசை விமர்சிப்பதை விட்டு விட்டு நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களை பற்றி சிந்திப்பது சாலச்சிறந்தது. ஊடகங்களில் சுயநல சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவது எமது நாட்டு தமிழ் மக்களை உளப்பூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்களாக நீங்கள் இருந்தால், எமது மக்களது எதிர்கால வாழ்வு சுபிட்சமாக அமையும். முடிந்தவரை பொறுப்புடன் செயல்படுவது காலத்தின் கட்டாயம் என தமிழகத்தின் அரசியல் தலைவர்களை அன்புடனும் மரியாதையுடனும் கொள்கிறேன்.


நன்றி!


நாமல் ராஜபக்சே.


இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்


இவ்வாறு நாமல் ராஜபக்சே அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story