Kathir News
Begin typing your search above and press return to search.

நாட்டிலேயே இரண்டு இடம் தான் - அதில் கோவை பெற்ற சிறப்பிடம்: பாதுகாப்பு தளவாடங்களுக்கான சாலை மேம்பாடு!

நாட்டிலேயே இரண்டு இடம் தான் - அதில் கோவை பெற்ற சிறப்பிடம்: பாதுகாப்பு தளவாடங்களுக்கான சாலை மேம்பாடு!

நாட்டிலேயே இரண்டு இடம் தான்  - அதில் கோவை பெற்ற சிறப்பிடம்: பாதுகாப்பு தளவாடங்களுக்கான சாலை மேம்பாடு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Nov 2019 11:31 AM GMT


பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தித் திட்டத்தின் பகுதியாகும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


“தமிழ்நாட்டிலும், உத்தரப்பிரதேசத்திலும் இரண்டு பாதுகாப்பு தளவாடங்களுக்கான சாலைகள் அமைக்க அரசு விரும்புகிறது. ஏற்கனவே கோயம்புத்தூரில் பாதுகாப்புத் துறையில் புதிய கண்டுபிடிப்புக்கான தொழிற்கூடம் செயல்படத் தொடங்கியுள்ளது. பாதுகாப்புக்கான திட்டமிடல் குழு உருவாக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசு உத்தேச புந்தேல்கண்ட் விரைவுச் சாலையோடு பாதுகாப்புத் தளவாடங்கள் கொண்டு செல்வதற்கான பாதை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இது பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் இந்தியாவை தற்சார்புடையதாக்க உதவும்” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.


உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் 2020 பிப்ரவரி 5 முதல் 8 வரை நடைபெறவுள்ள பாதுகாப்பு தொழில் கண்காட்சியில் பங்கேற்க வருமாறு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் முதலீட்டாளர்களுக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News