Top
undefined
Begin typing your search above and press return to search.

எஸ்.பி.ஜி.பாதுகாப்பு வாபஸ் பெற்றதில் அரசியல் இல்லை,முடிவை நாங்கள் எடுக்கவில்லை - ஜேபி நட்டா!

எஸ்.பி.ஜி.பாதுகாப்பு வாபஸ் பெற்றதில் அரசியல் இல்லை,முடிவை  நாங்கள் எடுக்கவில்லை - ஜேபி நட்டா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Nov 2019 11:35 AM GMT


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ,ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் அளிக்கப்பட்டு வந்த, எஸ்.பி.ஜி, பாதுகாப்பை விலக்கியது உள்துறை. இந்த விவகாரத்தில் லோக்சபாவில் காங்கிரஸ் அமளி ஈடுபட்டனர்.இன்று ராஜ்யசபாவில், இந்த விவகாரத்தை எழுப்பி, காங்கிரஸ் எம்.பி., ஆனந்த் சர்மா, கேள்வி எழுப்பினார், சோனியா குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. சோனியா, ராகுல், பிரியங்கா, மன்மோகன் சிங் ஆகியோரின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. பாதுகாப்பை மீண்டும் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.



 இதற்கு பதிலளித்த பா.ஜ., செயல் தலைவர் ஜேபி நட்டா பேசுகையில், சோனியா குடும்பத்தினரின் பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெறவில்லை. இதில் அரசியல் ஏதும் இல்லை. உள்துறை அமைச்சகத்திற்கு என சில விதிமுறைகளும் உள்ளன. பாதுகாப்பு வாபஸ் என்ற முடிவை அரசியல்வாதி எடுக்கவில்லை. ஒருவருக்கு உள்ள அச்சுறுத்தல் அடிப்படையில் பாதுகாப்பு அளிப்பது அல்லது திரும்ப பெறுவது என்ற முடிவை உள்துறை  தான் முடிவு எடுக்கிறது. பாதுகாப்பு திரும்ப பெற்றதில் அரசியல் இல்லை. என்றார்.


Next Story