Top
undefined
Begin typing your search above and press return to search.

மூலப்பதிரமும் இல்லை; வெறும் பத்திரமும் இல்லை! எஸ்.சி. கமிஷனிடம் கடிதம் கொடுத்துவிட்டு ஓட்டம்பிடித்த திமுக!

மூலப்பதிரமும் இல்லை; வெறும் பத்திரமும் இல்லை! எஸ்.சி. கமிஷனிடம் கடிதம் கொடுத்துவிட்டு ஓட்டம்பிடித்த திமுக!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Nov 2019 5:17 AM GMT


திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம், பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது பஞ்சமி நிலம் அல்ல என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். அப்படியானால் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலத்தின் மூலப்பத்திரத்தை வெளியிடுங்கள் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. பொதுமக்களும் இதைத்தான் எதிர்பார்க்கின்றனர்.


இதுதொடர்பாக பாஜக மாநிலச் செயலாளா் ஸ்ரீனிவாசன், தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குநரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய பட்டியலின ஆணையம், இன்று (செவ்வாய்) பிற்பகல் 3 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பி இருந்தது. நிலத்தின் ஆவணங்களை எடுத்து வருமாறும் கூறி இருந்தது.


அதன்படி, சாஸ்திரிபவனில் உள்ள பட்டியலின ஆணைய அலுவலகத்தில் புகார் அனுப்பிய ஸ்ரீனிவாசன், பாஜக செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமி, தலைமை செயலாளர், அரசு அதிகாரிகள் தேசிய பட்டடியலி ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் எல்.முருகன் முன்னிலையில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.


ஆனால், இந்த விசாரணையில் உதயநிதி ஸ்டாலின் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக ஆர்.எஸ்.பாரதி ஆஜரானார். அவரும் முரசொலி அலுவலகத்தின் மூலப்பத்திரத்தை காட்டவில்லை. அதுமட்டுமல்ல, வேறு எந்த பத்திரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. ஒரு கடிதத்தை கமிஷனிடம் வழங்கியுள்ளார். அதில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.


தேசிய பட்டியலின ஆணையத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்துவிட்டு வெளியே வந்த ஸ்ரீனிவாசனும், தடா பெரியசாமியும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஸ்ரீனிவாசன் கூறியதாவது:-


நான்தான் முரசொலி பஞ்சமி நிலம் தொடர்பான மனுதாரர். தடா பெரியசாமி பாஜக மாநில செயற்குழுவில் இருக்கிறார். மூத்த தலைவர். இவர், பஞ்சமி நில மீட்பு இயக்கத்தை 15 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருபவர். அதை பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரும் இதில் மனுதாரராக உள்ளார். நாங்கள் இருவரும், எஸ்.சி. கமிஷன் மூலமாக அழைக்கப்பட்டிருந்தோம். மாநில அரசு சார்பில் தலைமைச் செயலரும், உயர் அதிகாரிகளும் வந்து விளக்கங்களை கொடுத்திருக்கிறார்கள். மாநில அரசைப் பொருத்தவரை அவர்கள் ஜனவரி முதல் வாரம் வரை, கால அவகாசம் கேட்டு இருக்கிறார்கள். நிறைய ஆவணங்களை தேடி எடுக்க வேண்டியிருப்பதால் மேலும் கால அவகாசம் வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர். பாதிக்கு மேலாக ஆவணங்களை கொடுத்து இருக்கிறார்கள். இது தொடர்பாக ஒரு இடைக்கால அறிக்கையை மிகவிரைவாக வழங்குவதாக இருப்பதாகவும் அரசு தரப்பில் கூறியிருக்கிறார்கள்.


முரசொலி அறக்கட்டளை சார்பில் அவர்கள் எந்த ஆதாரமும், மூலப்பத்திரம் காண்பிக்கவில்லை. ஒரு கடிதம் மட்டுமே கமிஷனிடம் கொடுத்துள்ளார்கள். அந்தக் கடிதத்தில் என்ன குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்பது கமிஷனுக்கு மட்டுமே தெரியும். எங்களுக்கு அது தெரியாது.


முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்து இருந்தார். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த நிலத்தினுடைய பட்டாவை கண்டித்திருந்தார். ஆனால் அந்த பட்டாவைக்கூட இன்று எஸ்.சி. கமிஷனிடம் காண்பிக்கவில்லை. ஆணையத்திடம் முறையாக உரிய ஆவணங்களை காண்பிப்போம் என்றும் திமுக தரப்பில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் அப்படி எந்த ஆவணத்தையும் இன்று ஆணையத்திடம் காண்பிக்கவும் இல்லை, சமர்ப்பிக்கவும் இல்லை.


அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதுபற்றி கமிஷன்தான் முடிவு செய்ய வேண்டும். மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கமிஷன்தான் முடிவு செய்யவேண்டும். எங்களை பொருத்தவரை மனுதாரர் என்ற முறையில் நான் எனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறேன். தடா பெரியசாமி மிக விரிவாக இதுபற்றி ஆராய்ந்து அரசாங்கத்திற்கு உதவி செய்யும் வகையில் அரசாங்கத்திடம் இல்லாத சில தகவல்களையும் திரட்டி சமர்ப்பித்து இருக்கிறார். ஆணையத்திடமும் சமர்ப்பித்திருக்கிறார். அரசாங்கத்திடமும் சமர்ப்பித்திருக்கிறார். இதுபற்றி ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்கும்.


பஞ்சமி நிலம் என்பது தாழ்த்தப்பட்ட எஸ்.சி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலம். தமிழ்நாட்டில்தான் மிக அதிகமான பஞ்சமி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அது பற்றிய மிகப் பெரிய விவாதம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. ஜெயலலிதா காலத்தில் பையனூர் பங்களா பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டை திமுக எழுப்பியபோது, திமுக தரப்பில் இருந்து எந்த ஆதாரத்தையும் காண்பிக்கவில்லை. அதற்காக கம்யூனிஸ்டு கட்சிகளும் போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் அவர்களும் எந்த ஆதாரத்தையும் காண்பிக்கவில்லை.


இப்போதுகூட எனக்கு மறுப்பு தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் ஸ்டாலின், “நீங்கள் என்னிடம் நேரம் செலவழிப்பதைவிட பையனூரில் உள்ள பஞ்சமி நிலத்தை மீட்பதற்கு நேரம் செலவிடலாம்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் பையனூர் பஞ்சமி நிலம் தொடர்பான ஆதாரத்தை அவர் வெளியிடவில்லை.


பொறுப்புள்ள தலைவர்களாக அரசியலில் இருப்பவர்கள், அவர்கள் மீது குற்றச்சாட்டு வருகின்ற பொழுது அவர்கள் வசம் உள்ள முறையான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும். அதற்கு பதிலாக குற்றச்சாட்டு சுமத்தியவர்களிடம் “நீ ஆதாரத்தை காண்பி” என்று கூறுவது எந்த வகையிலும் சரியாக இருக்காது. பாஜக மீது இந்த குற்றச்சாட்டு வந்தால்கூட நாங்கள் அந்த ஆதாரத்தை காண்பிக்க வேண்டும். அதுதான் முறையானது.


1936-இல் இருந்து அரசு கெசட் காப்பி, ஸ்டாண்டிங் ஆர்டர் காபி, ஆர் எஸ் ஆர், எஸ்எல்ஆர் போன்ற ஆதாரங்களை எல்லாம் கொடுத்து இருக்கிறோம். இன்னும் சில ஆதாரங்களை அரசாங்கத்திடமிருந்து கேட்டிருக்கிறோம். உங்களிடம் உள்ள ஆதாரங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அரசாங்கமும் சொல்லியிருக்கிறது. ஆகவே எங்களிடம் உள்ள ஆதாரங்கள் அனைத்தையும் கொடுத்து இருக்கிறோம். ஆனால் திமுகவிடம் இருந்து எந்த ஆதாரத்தையும் அவர்கள் கொடுக்கவில்லை.


ஆணையும் கேட்ட ஆதாரங்களை திமுக கொடுக்கவில்லை. அரசாங்கத்திற்கு புரிதல் ஏற்படுகின்ற வகையில் முக்கியமான சில ஆதாரங்களையும் தடா பெரியசாமி கொடுத்திருக்கிறார். ஆணையத்திடமும் ஒரு காபி கொடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திடமும் ஒரு காப்பி கொடுக்கப்பட்டுள்ளது. ஊடக நண்பர்கள் வேண்டுமானால் உங்களுக்கும் அது தொடர்பான நகல் வழங்க தயாராக இருக்கிறோம். அல்லது உங்களுடைய இமெயில் முகவரியை எங்களிடம் கொடுத்தால், நாங்கள் உங்களுக்கு அனைத்து ஆதாரங்களையும் அனுப்பி வைக்கிறோம்.


விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று நாங்கள் ஒரு நாள் கூட அவகாசம் கேட்கவில்லை. அரசாங்கம் ஜனவரி வரை அவகாசம் கேட்டிருக்கிறது.




https://www.youtube.com/watch?v=jnpZwv_sL9Y&feature=youtu.be


இவ்வாறு ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார்.


தேசிய பட்டியலின ஆணையத்தின் முன் ஆஜராக திராணி இல்லாத உதயநிதி ஸ்டாலின், தனது குடும்ப விஸ்வாச அடிமை ஆர்.எஸ்.பாரதியை அனுப்பி வைத்தார். அவர், மூலப்பத்திரம் உள்பட எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. ஆனால் வெளியில் வந்து செய்தியாளர்களிடம், “நாங்கள் அனைத்து ஆதாரங்களுடன் ஆஜரானோம்” என்று கூசாமல் பொய் சொல்லிவிட்டு ஓடிவிட்டார். இதுதான் திமுகவின் பித்தலாம் என்பது.


Next Story