Top
undefined
Begin typing your search above and press return to search.

எங்கே இதை எதிர்த்து ஒரு கேள்வி கேட்கச்சொல்லுங்கள் பார்க்கலாம் - இந்துக்களுக்கு எதிராக அண்டர்கிரவுண்ட் வேலை பார்க்கும் ஊடகங்கள்.!

எங்கே இதை எதிர்த்து ஒரு கேள்வி கேட்கச்சொல்லுங்கள் பார்க்கலாம் - இந்துக்களுக்கு எதிராக அண்டர்கிரவுண்ட் வேலை பார்க்கும் ஊடகங்கள்.!

MuruganandhamBy : Muruganandham

  |  21 Nov 2019 9:44 AM GMT


வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருத பாடத்திற்கு, மற்ற சமூகத்தினரை சேர்க்க மறுத்ததை பெரிய விசயமாக பேசும் கம்யூனிஸ்ட், திமுக ஊடகங்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் தெரியவில்லை.





டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியின் விளம்பரம் இது.


கல்லூரியின் முதல்வர் பதவிக்கு விண்ணப்பிக்க சில தகுதிகளை குறிப்பிடுகிறார்கள். அவற்றுள் கிறிஸ்தவ திருச்சபையின் (Parish) பாஸ்டரிடமிருந்து சிபாரிசு கடிதம் மற்றும் ஞானஸ்நானம் பெற்றதற்கான சான்றிதழ் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்பவை மிகவும் முக்கியமானவை!!


இதேபோல் ஒரு இந்து கல்லூரி மடாதிபதிகளிடமிருந்து சான்றிதழ் வாங்கி இணைக்க வேண்டும் என்று விளம்பரம் வெளியிட்டிருந்தால் என்ன ஒரு அமர்க்களம், அமளி நடந்திருக்கும்.எவ்வளவு கூச்சல் போட்டிருப்பார்கள், தேசத்தின் "பன்முகத்தன்மை" ஆபத்தில் உள்ளது என்று எத்தனை "பிரபலங்கள்" கண்டன குரல்களை எழுப்பியிருப்பார்கள்?


ஆனால் இவையெல்லாம் மதசார்பின்மை பட்டியலில் வரும். ஆகையால் ஊடகங்களில் விவாதங்கள் நடக்காது, கண்டன அறிக்கைகள் வராது. இப்போது புரிந்து கொள்ளுங்கள் எதை நாம் உணர்ச்சிபூர்வமாக பார்க்க வேண்டும்.? எதனை நாம் சாதரணமாக கடந்து சொல்ல வேண்டும் என்பதை கூட இவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். இது புரியாமல் பிரிவினைவாதிகளின் பேச்சை உண்மை என்று மக்கள் நம்பும் வரையில், நாடு நல்ல நிலையில் செல்லாததை போல தான் தோன்றும்.


Next Story