Top
undefined
Begin typing your search above and press return to search.

"நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன்" - திருமாவளவன் வாக்குமூலம்! இந்து என்று போலி சான்றிதழ் கொடுத்ததால், பதவி பறிபோகிறதா!

நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன் - திருமாவளவன் வாக்குமூலம்! இந்து என்று போலி சான்றிதழ் கொடுத்ததால், பதவி பறிபோகிறதா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Nov 2019 12:07 PM GMT


பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், அந்த சமுதாயத்தை சார்ந்த இந்துக்கள் மட்டுமே போட்டியிட முடியும். கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிய பட்டியல் இன மக்கள், தொகுதிகளில் போட்டியிட முடியாது. மதம் மாறிய ஒருவர் “இந்து ஆதிதிராவிடர்” என்று போலி சான்றிதழ் கொடுத்து, தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அவரது பதவி பறிக்கப்படும்.


இந்துக்களையும், இந்து மத வழிபாட்டு முறைகளையும், இந்து தெய்வங்களையும் நீண்ட காலமாகவே திருமாவளவன் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.


சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், இந்து தெய்வங்களை கேவலமாக பேசினார். இது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


இதனைத் தொடர்ந்து திருமாவளவன் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் இந்து அமைப்பினரும், தனி நபர்களும் புகார் கொடுத்து வருகின்றனர். திருமாவளவன் மீது வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.


இந்தநிலையில் திருமாவளவன், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியில், “நான் கிறிஸ்தவ மதத்தைதான் பின்பற்றி வருகிறேன்” என்று வெளிப்படையான வாக்குமூலமாக கொடுத்துள்ளார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.






அந்த வீடியோவில் திருமாவளவன் “ரியலி நான் கிறிஸ்தவ மதத்தை சார்ந்துதான் இருக்கிறேன். கிறிஸ்தவ நிகழ்சிகளில் கலந்துகொள்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.


திருமாவளவன் இந்து மதத்தை பின்பற்ற வில்லை. மாறாக கிறிஸ்தவ மதத்தைதான் அவர் பின்பற்றி வருகிறார் என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன், “இந்து ஆதிதிராவிடர்” என்று போலி சான்றிதழ் கொடுத்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இப்போது அவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டதால் அவர் தனித்தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றது சட்டபடி செல்லாது.


இதனால் திருமாவளவன் மீது கோபத்தில் இருந்த இந்துக்கள், இந்த ஆதாரத்தை பயன்படுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்து உள்ளனர். எனவே திருமாவளவன் “இந்து ஆதிதிராவிடர்” என்று போலி சான்றிதழ் கொடுத்து சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிட்டது செல்லாது என்று விரைவில் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட உள்ளது. எனவே அவரது எம்பி பதவி விரைவில் பறிக்கப்படும்.


எனவே, சிதம்பரம் தனி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.


Next Story