Top
undefined
Begin typing your search above and press return to search.

வீரமணியை ஓட ஓட விரட்டி, அடித்து துரத்திய மலேசிய தமிழர்கள் - தமிழகத்தை தாண்டி எங்கும் எடுபடாத 'திராவிட' சித்தாந்தம் : அதிர்ச்சியில் திராவிடர் கழகம்!

வீரமணியை ஓட ஓட விரட்டி, அடித்து துரத்திய மலேசிய தமிழர்கள் - தமிழகத்தை தாண்டி எங்கும் எடுபடாத

MuruganandhamBy : Muruganandham

  |  21 Nov 2019 10:42 AM GMT


மலேசியாவில் திராவிட கழக தலைவர் வீரமணி கலந்துகொள்ள இருந்த நிகழ்வு, அந்நாட்டு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வீரமணியின் மலேசிய பயணத்தின் போது அங்கு 'பெரியார்' திரைப்படம் திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. கோலாலம்பூரில் உள்ள Indian High Commission-னின் ஒரு பகுதியாக இருக்கும், இந்தியா-மலேசியா பாரம்பரியக் குழு மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலாச்சார மையம் ஆகியோரால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதனை எதிர்த்து வீரமணியை மலேசியாவுக்கு வர தடை விதிக்குமாறு, அந்நாட்டு இந்து அமைப்புகள் மலேசிய உள்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தன. பல இனம் மற்றும் பல கலாச்சாரம் உள்ள  நாட்டில், மத நம்பிக்கைக்கு எதிராக எந்த செயல்களும் நடக்க கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


அப்போது வீரமணியின் வீடியோ கிளிப்பை ஆதாரமாக காட்டினர். அதில் அவர் கடவுளை வணங்குபவர்களையும், எல்லா மதங்களையும் “முட்டாள்கள்” என்று அழைத்தார். இப்படி, இந்து கடவுள்களையும் இந்துக்களையும் இழிவாக பேசிய ஒருவரை மலேசியாவுக்கு அழைக்கப்பட்டது குறித்து பல்வேறு தரப்பட்ட மக்களும் சமூக ஊடகங்களில் அதிருப்தி தெரிவித்தனர்.


இந்த நிகழ்வில் Indian High Commission ஏன் முதன்முதலில் களமிறங்கியது என்று மலேசிய தமிழர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். மலேசியாவில் திராவிட சித்தாந்தங்களை தாங்கள் நிராகரித்துள்ளதாக கூறியுள்ளனர்.


ஏற்கனவே வீரமணி 2012 ஆம் ஆண்டு மலேசியா வந்த போது, ஈப்போவில் நடந்த ஒரு கூட்டத்தில், ஸ்ரீ கிருஷ்ணரை இழிவுபடுத்தியிருந்தார். அதன்பிறகு மலேசிய இந்து சங்கம் அதனை வன்மையாக கண்டித்த நிலையில், மீண்டும் வீரமணி மலேசிய வர இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. விரைவில் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.


Next Story