Top
undefined
Begin typing your search above and press return to search.

பழைய வாகனங்களை அழித்து புதிய வாகன விற்பனையை அதிகரிக்க மோடி அரசு புதிய திட்டம்-மோட்டார் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை .!

பழைய வாகனங்களை அழித்து புதிய வாகன விற்பனையை அதிகரிக்க மோடி அரசு புதிய திட்டம்-மோட்டார் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை .!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Nov 2019 9:02 AM GMT



சுற்றுச் சூழல் மாசுபாட்டுக்குத் தீர்வு காணும் வகையில் 15 ஆண்டுகள் பழையதான வாகனங்களை மக்கள் தாங்களே அழிக்க முன்வர வகை செய்யும் திட்டத்தை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முன்வைத்துள்ளது. இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு மத்தியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு துறைகளின் கருத்துக்களை அறிய திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் அங்கீகரிக்கப்பட்ட வாகன அழிப்பு மையங்களை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 15 ஆண்டுகள் பழமையான தனியார் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் 25 மடங்கும், வணிக வாகனங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யும் ஃபிட்னஸ் சான்றிதழ் கட்டணம் 125 மடங்கும் உயர்த்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


வணிக வாகனங்கள் நல்லமுறையில் இருப்பதை உறுதிப்படுத்தி ஆண்டுதோறும் சான்றிதழ் பெற வேண்டியது அவசியமாகும். அதே போன்று தனியார் வாகனங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு பதிவுச் சான்றிதழ் பெறுவதும் அவசியமாகும் தங்கள் பழைய வாகனங்களை அழிக்க முன்வருபவர்களுக்கு பதிவுக்கட்டணத்தில் சலுகை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், பழைய வாகனங்களை அழித்து விட்டு புதிய வாகனங்களை வாங்க முன்வருபவர்களுக்கு விலையில் சலுகை அளிப்பதுடன் வாங்குவதில் சுலப முறை திட்டங்களை கொண்டு வருவது குறித்தும் வாகன உற்பத்தி நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Next Story