Top
undefined
Begin typing your search above and press return to search.

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது, பயம் வேண்டாம்! மத்திய அமைச்சர் கேரளாவுக்கு பதில்!

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது, பயம் வேண்டாம்! மத்திய அமைச்சர் கேரளாவுக்கு பதில்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Nov 2019 12:42 PM GMT



கேரளாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்பி குரியகோஷ் இன்று முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்புக்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அணையில் உடைப்பு ஏற்பட்டால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டு கேரள மக்களுக்கு பேரிடராக அமையும் எனவும், எனவே மத்திய அரசு இந்த விஷயத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும், எனவும் கேட்டுக் கொண்டார்.


இதற்கு மத்திய நீர் சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், பதிலளித்துப் பேசுகையில் முல்லைப்பெரியாறு அணை எல்லா வகையிலும் பாதுகாப்பாக இருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பருவமழைக்கு முன்பும் பின்பும் அணையின் பாதுகாப்பு தொடர்பாக முறையாக ஆய்வு நடத்தப்பட்டு பாதுகாப்புத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.


மேலும், கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட ஆய்வின்படி அணை முழுவதும் பாதுகாப்பாக இருக்கிறது. அணையில் மேற்கொண்டு பராமரிப்பு பணிகளைச் செய்வதற்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றும் மத்திய மந்திரி ஷெகாவத் கூறினார்.


Next Story