Top
undefined
Begin typing your search above and press return to search.

சோனியா உயிருக்கு, இல்லாத விடுதலைப்புலிகளால் ஆபத்து என்று பாராளுமன்றத்தில், திமுக ஒப்பாரி வைத்தது ஏன்? பித்தலாட்ட பின்னணி அம்பலம்!

சோனியா உயிருக்கு, இல்லாத விடுதலைப்புலிகளால் ஆபத்து என்று பாராளுமன்றத்தில், திமுக ஒப்பாரி வைத்தது ஏன்? பித்தலாட்ட பின்னணி அம்பலம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Nov 2019 7:10 AM GMT


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து சோனியா மற்றும் அவரது குடும்பத்திற்கு உச்சபட்ச பாதுகாப்பான எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.


2009-ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் நடந்த சண்டையில் விடுதலைப்புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டனர். இப்போது அந்த அமைப்பே இல்லை.


இதற்கிடையே ராஜீவ் காந்தியை கொலையாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஸ்டாலின், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சியினர், திருமாவளவன், கி.வீரமணி, போன்றவர்களெல்லாம் நீண்டநாட்களாக போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக காங்கிரசும் குரல் எழுப்பி வருகிறது. அவர்களை விடுதலை செய்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று ராகுல்காந்தியும் அறிவித்துவிட்டார்.


எனவே இப்போது சோனியா காந்திக்கும், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் விடுதலைப்புலிகளால் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும் இடமே இல்லை. விடுதலைப் புலிகளே இல்லாதபோது, விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் எப்படி வரும்?


இது ஒருபுறமிருக்க, சோனியா காந்திக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் இதுவரை எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. எஸ்.பி.ஜி பாதுகாப்பில் சோனியாவுக்கு மட்டும் 40 பாதுகாப்புப் படை வீரர்கள், கையில் எந்திர துப்பாக்கிகளுடன் ஷிப்ட் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கி வந்தனர். இதுபோக இந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சிறப்பு நவீன கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது.


சோனியா காந்திக்கு இப்போது எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றபோதிலும், எஸ்.பி.ஜி பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. சோனியாகாந்தி மட்டுமல்ல, அவரது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும், முன்னாள் பிரதமர் என்ற முறையில் மன்மோகன்சிங் போன்றவர்களுக்கும், மற்றும் பலருக்கும் இதுபோன்ற பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் ஆண்டிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டு வந்துள்ளது.


இந்த நிலையில் முன்னாள் பிரதமர்கள் மற்றும் சோனியா காந்தி குடும்பத்தார் இவர்களுக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பை, இசட் பிளஸ் பாதுகாப்பாக மாற்றியிருக்கிறது. அதாவது இசட் பிளஸ் பாதுகாப்பில் ஒருவருக்கு 36 வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இவர்களுக்கும் எந்திர துப்பாக்கி வழங்கப்பட்டிருக்கும்.


இந்தப் பாதுகாப்புதான் சோனியா காந்திக்கு போதவில்லை என்று பாராளுமன்றத்தில் தர்ணா நடத்திவருகின்றனர் காங்கிரசார்.


இதற்கு முக்கியமான காரணம் எஸ்.பி.ஜி பாதுகாப்பில் ஒருவர் இருக்கும்போது, அவரை எளிதாக கைது செய்ய முடியாது. கடுமையான விதிமுறைகள் உள்ளன. எனவேதான் காங்கிரசார் கதறுகின்றனர். எஸ்.பி.ஜி பாதுகாப்பை நீக்கியதன் மூலம் குற்றச்சாட்டுக்கு ஆளான ராபர்ட் வதேரா கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் அவர்கள் துடிக்கிறார்கள். மற்றபடி அவர்களுக்கு இப்போதும் உச்சக்கட்ட பாதுகாப்புதான் வழங்கப்பட்டு உள்ளது என்பது அவர்களுக்கே தெரியும்.


இது ஒருபுறமிருக்க, சோனியாவிற்கு மீண்டும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் காங்கிரசை விடவும் நீட்டி முழங்கியவர்கள் திமுகவினர். இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, “விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்தது. அந்த அமைப்பு, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்துள்ளது. அந்த அமைப்பின் மூலம் இந்தியர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளால், சோனியா காந்திக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆபத்து உள்ளது” என்று பேசினார்.


அதோடு நில்லாமல், திமுக எம்பிக்கள், பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள்.


இந்த நேரத்தில் அவையிலிருந்த காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எந்தவித சலசலப்பும் இன்றி அமைதியாக இருந்தனர். அதிலும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சோனியாவின் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளது.


இது ஒருபுறமிருக்க, மு.க.ஸ்டாலின், கடந்த பல ஆண்டுகளாகவே ராஜீவ் காந்தி கொலையாளிகள், பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளார். இப்போது அந்த விடுதலைப் புலிகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து என்கிறது திமுக.


இலங்கையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அதிபராக தேர்வு செய்யப்பட்டதும், திமுக தனது விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை குழி தோண்டி புதைத்து விட்டது. அவரது வெற்றி தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ஒரு இடத்தில்கூட கோத்தபய அதிபராக தேர்வு செய்யப்பட்டது இலங்கை வரலாற்றில் துக்கநாள் என்றோ, துயர நாள் என்றோ, வரலாற்றில் கருப்பு பக்கம் என்றோ எந்த ஒரு வார்த்தையும் பயன்படுத்தவில்லை. மிகக் கவனமாக அவற்றை தவிர்த்துள்ளார் ஸ்டாலின். மற்ற தமிழ் வியாபாரிகளைப் போன்று வசை பாடாமால் நழுவினார் ஸ்டாலின்.


திமுக திடீரென விடுதலைப்புலிகளை மிகக்கடுமையாக பாராளுமன்றத்தில் எதிர்த்து பேச வேண்டிய அவசியம் என்ன?


இங்குதான் அவர்களுடைய தொழில் இருக்கிறது. திமுக எம்பியும் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ஜெகத்ரட்சகன் பெயரில் இலங்கையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது திமுகவின் பணம் என்று சொல்கிறார்கள். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால், இவர்களுடைய 26,000 கோடி ரூபாய் முதலீட்டுக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது. இதனால்தான், திமுக, திடீரென விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளது. அதை டி.ஆர்.பாலு மூலமாக பாராளுமன்றத்தில் அரங்கேற்றி உள்ளது.


இதன் மூலம், விடுதலைப்புலிகளையும், அப்பாவி இலங்கை தமிழர்களையும் கொன்று குவித்த ராஜபக்சே, அவரது தம்பி கோத்தபய ஆகியோருக்கு ஸ்டாலின் உணர்த்தியுள்ளார். “கருணாநிதியைப் போலவே, நானும் உங்களின் நண்பர்தான்” என்பதை ஸ்டாலின் புரிய வைத்துள்ளார்.


இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பாராளுமன்றத்தில் திமுக விடுதலைப்புலிகளை கடுமையாக விமர்சித்துள்ளது. அதனை அப்போது பாராளுமன்ற அவையில் இருந்த திருமாவளவனும் மற்ற விடுதலைப்புலிகள் ஆதரவு எம்பிக்களும் எதிர்க்கவில்லை. ஈழத்தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் கும்பலில் ஒருவர்கூட திமுகவின் இந்த செயலை எதிர்க்கவும்வில்லை, கண்டிக்கவுமில்லை, மொத்தத்தில் கண்டுகொள்ளவே வில்லை.


எனவே ராஜீவ்காந்தி கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற திமுகவின் நிலைப்பாடு தகர்க்கப்பட்டு விட்டது. இனி திமுக, இதில் கவனம் செலுத்தாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.


Next Story