Top
undefined
Begin typing your search above and press return to search.

மத்திய அரசுத் துறைகளில் 7 லட்சம் காலிப் பணியிடங்கள் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்!

மத்திய அரசுத் துறைகளில் 7 லட்சம் காலிப் பணியிடங்கள் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2019 6:19 AM GMT


மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் குரூப்ஸ் C பிரிவில் அதிகபட்சமாக 6 லட்சத்து 83 ஆயிரத்து 773காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் குரூப்ஸ் B  பிரிவில் 89 ஆயிரத்து 638 பணியிடங்களும் குரூப்ஸ் A பிரிவில் 19 ஆயிரத்து 796 பணியிடங்களும் காலியாக உள்ளதாக தெரிவித்தார்.



இந்தப் பணியிடங்களில் சுமார் ஒரு லட்சத்து 5 ஆயிரம் இடங்களில் நிரப்புவதற்கு நடவடிக்கையை நடப்பாண்டில் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார் மேலும் இரண்டு ஆண்டு புள்ளி விவரங்களையும் கொடுத்துள்ள ஜிதேந்திர சிங் மொத்தம் 4 லட்சத்து 8 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.


Next Story