Top
undefined
Begin typing your search above and press return to search.

பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோவை காண்பித்து தவறாக நடக்க முயன்ற “பாலியல்” பாதிரியார் கைது!

பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோவை காண்பித்து தவறாக நடக்க முயன்ற “பாலியல்” பாதிரியார் கைது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2019 7:13 AM GMT


கோவை காந்திபுரத்தில் புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி உள்ளது. இது அரசு உதவி பெறும் பள்ளி ஆகும். இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தாளாளராக மரிய ஆண்டனி தாஸ் (வயது 55) என்ற கிறிஸ்தவ பாதிரியார் இருக்கிறார். இவர் ராமநாதபுரம் புலியகுளத்தை சேர்ந்தவர்.


மரிய ஆண்டனி தாஸ், தனது மொபைல் போனில் ஏராளமான ஆபாச வீடியோக்ளை பதிவு செய்து வைத்துள்ளார். அந்த வீடியோக்களை பள்ளி மாணவிகளுக்கு காண்பித்து அவர்களை தனது காம இச்சைக்கு பயன்படுத்தும் கெட்ட நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார்.


இதற்காக அந்தப் பள்ளியில் படித்து வரும் 10 வகுப்பு மாணவியர் 5 பேரை தனது அறைக்கு அழைத்துள்ளார் மரிய ஆண்டனி தாஸ். பின்னர் அந்த மாணவிகளிடம் தனது மொபைலை கொடுத்து, இதில் சில ஆப்ஸ்களை இன்ஸ்டால் பண்ணி தரும்படி கேட்டுள்ளார். அந்த மாணவிகளும் அவருக்கு ஆப் இன்ஸ்டால் பண்ண தெரியாமல் தங்களிடம் உதவி கேட்டுள்ளார் என்று நினைத்து அவரது மொபைலை வாங்கினர்.


மரிய ஆண்டனி தாசின் மொபைலை வாங்கி பார்த்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் இருந்தவை அனைத்தும் ஆபாச வீடியோக்கள். அவரின் வக்கிர நோக்கத்தை புரிந்து கொண்ட மாணவிகள் உஷாராகி, உடனே அந்த மொபைலை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.


வீட்டிற்கு சென்று மாணவியர், தங்களின் பெற்றோரிடம் பாதிரியார் மரிய ஆண்டனி தாஸ், நடந்து கொண்ட கேவலமான முறையை தெரிவித்தனர். ஆத்திரமடைந்த பெற்றோர், புனித மரியன்னை பள்ளி முன் திரண்டனர். பாதிரியார் மரிய ஆண்டனி தாசை முற்றுகையிட்டு, இதுதொடர்பாக கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதிரியார் மரிய ஆண்டனி தாசை தாக்க தொடங்கினர்.


இதுபற்றி தகவல் தெரிந்ததும் ரத்தினபுரி போலீசார் விரைந்து வந்து மரிய ஆண்டனி தாசிடம் விசாரணை நடத்தினர். அதில் மாணவர்களை தனது காம இச்சைக்கு பயன்படுத்திக்கொள்ளும் தவறான நோக்கத்துடன், அவர் நடந்துகொண்டது உறுதிசெய்யப்பட்டது. உடனே அவரை காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர். பாதிரியார் மரிய ஆண்டனி தாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


பாதிரியார் மரிய ஆண்டனி தாஸ், இதற்கு முன்பு இதுபோல மாணவிகளை வசியப்படுத்தி தனது காம லீலைகளை அரங்கேற்றியுள்ளாரா என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


பாரதிரியார் மரிய ஆண்டனி தாஸ், மாணவிகளிடம் செக்ஸ் வீடியோ காண்பித்து தவறாக நடக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story