Top
undefined
Begin typing your search above and press return to search.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை!

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2019 8:04 AM GMT


சீனாவின் புடியான் நகரில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இதில் தமிழகத்தின் தங்க மங்கையான இளம் வீராங்கனை இளவேனில் வாலறிவன் (20), நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் 250.8 புள்ளிகள் பெற்று இளவேனில் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார்.



இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனீரோவில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில்  10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் கலந்து கொண்டு 251.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.சீனியர் பிரிவில் இளவேனிலுக்கு கிடைக்கும் இரண்டாவது தங்கம் இதுவாகும்.


தங்கம் வென்ற இளவேனில்க்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


Next Story