Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியா – கத்தார் கடற்படை கூட்டு பயிற்சி!

இந்தியா – கத்தார் கடற்படை கூட்டு பயிற்சி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2019 9:38 AM GMT


இந்தியா-கத்தார் இணைந்து கடல்யுத்த ஒத்திகையை நவம்பர் 17- 21 வரைநடத்துகிறது. இந்திய கடற்படையும் கத்தார் கடற்படையும் இணைந்துஇந்த ஒத்திகையை நடத்துகிறது. ஐந்து நாள் இந்த ஒத்திகை நடக்கும். இந்தியா கத்தார் இடையேயான உறவு பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு அடிப்படையிலும் மிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. கத்தாரில் இருந்து ஆண்டிற்கு 17 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் இயற்கை எரிவாயு மிக மிக முக்கியமானது. இந்தியாவின் 80 சதவீத தேவையை பூர்த்தி செய்கிறது. 2014 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட . “மேற்கு நோக்கிய கவனம்” “ என்கிற நிலைப்பாட்டின் அடிப்படையில் கத்தாருடனான உறவு ராஜரீக அடிப்படையில் மிகமுக்கியத்துவமானதாக இருக்கிறது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் கடல் வழித்தடம் சீனா அமெரிக்கா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றி கொள்ளும் இடமாக அமைந்து
இருக்கிறது.


அதன் அடிப்படையில் இந்திய கத்தார் இடையேயான இந்தக் கூட்டுப்பயிற்சியில் அதன் முக்கியத்துவம அரசியல் ஆய்வாளர்களால் கூர்ந்து நோக்கப்படுகிறது. ஐந்து நாள் நடக்கும் இந்த பயிற்சியின் நோக்கம்
இருநாட்டு உறவுகளையும் கடல் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் சார்ந்த நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவும் இருக்கிறது.
இந்த ஒத்திகை பயிற்சி இரண்டு பிரிவாக பிரிக்கப்படுகிறது ஒன்று ராணுவ ரீதியிலான கருத்துப் பரிமாற்றங்கள் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள் போன்றவை . இரண்டாவது கடல் யுத்தம் நத்துவதற்கான ஒத்திகை, தாக்குதல் ஒத்திகை, கடல் மற்றும் வான்வழிப்
பயிற்சிகள் போன்றவை.


இதில் பங்குபெறும் இந்திய போர்க் கப்பல்கள் மற்றும் தளவாடங்கள் PE 1 கண்காணிப்பு விமானங்கள் மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் கடற்படை சார்பாக கப்பல்களை தாக்கி அழிக்கும் ரஃபேல் விமானங்கள் பங்கேற்றன. இந்தியாவின் ஐ.என்.எஸ் திரிகாந்த் கேப்டன் விஷால் விஷ்ணு வழிநடத்துகிறார். இந்திய கப்பல் படையின் முன்னணியில் இருக்கும் அதி நவீன ஆயுதங்களைக் கொண்ட போர்க்கப்பல் ரஷ்யாவின் கலெனின் இராட்டில் நிர்மாணிக்கப்ப்பட்ட இந்த கப்பல் இந்திய கடற்பரப்பில் மேற்கு
எல்லையில் நிலை கொண்டிருக்கிறது.


Next Story