Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வதேச தொழில் வர்த்தக காட்சியகம் தலைநகர் தில்லியில் நடைபெறுகிறது!

சர்வதேச தொழில் வர்த்தக காட்சியகம் தலைநகர் தில்லியில் நடைபெறுகிறது!

சர்வதேச தொழில் வர்த்தக காட்சியகம் தலைநகர் தில்லியில் நடைபெறுகிறது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2019 10:09 AM GMT


39 ஆவது தொழில் வர்த்தக கண்காட்சி இந்தியாவில் நடைபெறும் சர்வதேச தொழில் வர்த்தக காட்சியகம் (IITF) India International Trade Fair ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் நவம்பர் 27 வரை தலைநகர் தில்லியில்
நடைபெறும் இதை இந்திய வர்த்தக மேம்பாடு குழுமம் நடத்துகிறது. இந்த நிகழ்வு உலகெங்கிலும் உள்ள உற்பத்தியாளர்கள் வணிகர்கள் ஏற்றுமதியாளர்கள் என்று தொழில் வியாபாரம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும் நிகழ்வாக இருக்கின்றது. 1980 இல் முதன் முறையாக நடைபெற்ற இந்த நிகழ்வு இந்த வருடம் முப்பத்தி ஒன்பதாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுடன் இந்த நிகழ்வானது நடத்தப்படும். தொழில் வளர்ச்சிக்கான இசைவு தன்மை
என்பது இந்த ஆண்டின் குறிக்கோளாக உள்ளது சென்ற ஆண்டு கிராமப்புற தொழில் வளர்ச்சி என்பதாக இருந்தது.


சிறு குறு மற்றும் மத்தியதர தொழில் மேம்பாட்டு துறையின் அமைச்சர் நிதின் கட்காரி இந்த
நிகழ்வை துவங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் பலதரப்பட்ட உற்பத்திப் பொருட்கள் இடம்
பெறுகின்றன சுயதொழில் புரிவோர் சுய உதவி குழுக்கள் அரசு சாரா அமைப்புகள் என்று பலர்
இந்த கண்காட்சியில் பங்கேற்றார்கள். இந்த கண்காட்சியின் மூலம் அவர்கள் தங்கள் தயாரிப்புகளை உலகம் தழுவிய அளவில் கொண்டு சேர்க்கும் வாய்ப்புகளைப் பெறுவார்கள். இந்த 39 ஆம் வருட நிகழ்வின் குறிக்கோளான தொழில் வளர்ச்சியில் இசைவு தன்மை என்பது இந்தியா உலக வங்கி வகுத்திருந்தார் இந்தத் தொழில் வளர்ச்சியின் இசைவுத் தன்மை குறியீட்டில் அறுபத்தி மூன்றாவது இடத்தை பெற்ற தாய் இதையே இந்த வருட தொழில் கண்காட்சிக்கான நிகழ்வாக ஏற்படுத்தி. இந்த வருடத்தின் இணை பங்களிப்பாளர் என்கிற அந்தஸ்தை ஆப்கானிஸ்தான் பெறுகிறது. கொரியா தேசம் கவனயீர்ப்பு நாடாக பங்கு
பெறுகிறது இந்திய மாநிலங்களை பொறுத்தவரை கவன ஈர்ப்பு மாநிலமாக பீகார் ஜார்கண்ட்
இடம்பெறுகிறது.


இந்தத் தொழில் கண்காட்சியில் பஹ்ரைன் பங்கிலாதேஷ் மியன்மர் பூடான் சீனா எகிப்து
ஆஸ்திரேலியா இந்தோனேசியா ஹாங்காங் ஈரான் நேபால் இங்கிலாந்து தாய்லாந்து துருக்கி
வியட்நாம் மற்றும் துனிசியா சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.


இந்த கண்காட்சியில் பலதரப்பட்ட உற்பத்தி பொருட்கள் இடம்பெற இருக்கின்றன இயந்திர
பாகங்கள் வீட்டு உபயோக பொருட்கள் துணி வகைகள் உணவு மருந்து பொருட்கள் மருத்துவ
மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான பொருட்கள் விளையாட்டு மற்றும் பொறியியல்
சம்பந்தப்பட்ட உபகரணங்கள் இடம்பெறுகின்றன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News