Top
undefined
Begin typing your search above and press return to search.

“பயங்கரவாதியான எனது மகள் உடல் இந்த நாட்டிற்கும், வீட்டிற்கும் தேவையில்லை” – குமரிமாவட்ட வீர தாயின் தீர்க்கமான முடிவு!

“பயங்கரவாதியான எனது மகள் உடல் இந்த நாட்டிற்கும், வீட்டிற்கும் தேவையில்லை” – குமரிமாவட்ட வீர தாயின் தீர்க்கமான முடிவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2019 10:53 AM GMT


கடந்த அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி வனப்பகுதியில் மணிவாசகம், கார்த்தி, அரவிந்த் மற்றும் ரமா என்ற அஜிதா ஆகிய 4 மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் 4 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.


இந்த நிலையில், கேரள போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் பெண் தீவிரவாதி ரமா, தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவள் என்பது தெரியவந்துள்ளது.


ரமாவின் உண்மையான பெயர் அஜிதா. இவள் கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே உள்ள நிலப்பாறையை சேர்ந்தவள்.


அஜிதா, சிறுவயதாக இருந்தபோதே தந்தை இறந்துவிட்டார். தாயார் பெயர் சொர்ணபாய். அஜிதாவை கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் படிக்க வைத்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ படித்துள்ளாள். அதன்பிறகு மேற்படிப்பிற்காக சென்னை சென்ற அவர், அங்கு படிப்பை தொடராமல் பாதியில் நிறுத்திவிட்டாள்.


அதன் பிறகு 2014-ஆம் ஆண்டு மதுரை சட்டக்கல்லூரியில் மீண்டும் படிப்பை தொடர்ந்து உள்ளாள். அப்போதுதான் அவனுக்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் உள்ள கம்யூனிஸ்ட் தீவிரவாதிகள் மூலம் இந்த தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மாவோயிஸ்டு பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து தானும் ஒரு பங்கரவாதியாக செயல்பட்டு வந்துள்ளாள். அவள் தனது அடையாளத்தை மறைப்பதற்காக அஜிதா என்ற தனது பெயரை ரமா என்று மாற்றி அந்த பெயரில் இயங்கி வந்துள்ளாள்.


இந்த நிலையில்தான் கடந்த மாதம் கேரளாவில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் அஜிதாவும் பலியாகியுள்ளாள்.


அஜிதாவின் உடலை அடையாளம் காண்பிப்தற்காக அவளது தாயார் சொர்ணபாயை கேரள போலீசார் அழைத்து சென்றனர். திருச்சூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அஜிதாவின் உடலை பார்த்த சொர்ணபாய், அவள் தனது மகள் அஜிதா என்பதை உறுதி செய்தார்.


ஆனால் மகளுக்காக சொர்ணபாய் ஒரு சொட்டு கண்ணீர் சிந்த வில்லை. அவளது உடலை வாங்க சொர்ணபாய் மறுத்து விட்டார். அவருக்கு கேரள போலீசார் 48 மணி நேரம் அவகாசம் அளித்தனர். ஆனாலும் சொர்ணபாய், மாவோயிஸ்ட் பயங்கரவாதியான தனது மகள் அஜிதாவின் உடலை வாங்க மறுத்துவிட்டார். “அஜிதான என் மகள்தான் என்றாலும், பயங்கரவாதியான அவளது உடல் இந்த நாட்டிற்கும், வீட்டிற்கும் தேவையில்லை” என்று கூறிவிட்டு கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story