Kathir News
Begin typing your search above and press return to search.

துரோகத்தை துரோகத்தால் வீழ்த்திய பட்னாவிஸ்! வாழ்த்து குவிகிறது!

துரோகத்தை துரோகத்தால் வீழ்த்திய பட்னாவிஸ்! வாழ்த்து குவிகிறது!

துரோகத்தை துரோகத்தால் வீழ்த்திய பட்னாவிஸ்! வாழ்த்து குவிகிறது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Nov 2019 7:34 AM GMT


மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனால் அங்கு பாஜக – சிவசேனா கூட்டணி அரசு அமையும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர்.


ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போட்டார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. எடுத்த எடுப்பிலேயே தனது மகன் ஆதித்ய தாக்கரேவை முதல்வர் ஆக்க வேண்டும் என்று அறிவித்தார். மேலும் 50 சதவீத அமைச்சர்களையும் சிவசேனாவுக்கு ஒதுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார்.


அனுபவம் எதும் இல்லாத 29 வயது ஆதித்ய தாக்கரேவை மிகப்பெரிய மாநிலமான மகராஷ்டிராவிற்கு முதல்வர் ஆக்குவதில் பாஜகவிற்கு உடன்பாடில்லை. மக்களும் இதை விரும்பவில்லை. மேலும் பாஜக வென்ற 105 இடங்களில், பாதி இடங்களை கைப்பற்றிய (56 இடங்கள்) சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதே அதிகம்தானே? இருந்தாலும், இதையும் தாண்டி சிவசேனாவிற்கு துணை முதல்வர் பதவி கொடுக்க பாஜக முன்வந்தது.


ஆனால் தன் மகனை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தே தீரவேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே விடாபிடியாக இருந்தார். பதவி வெறி அவரை தங்களின்பரம எதிரிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்க்க வைத்தது.


தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆசைக்காட்டினார். காங்கிரசும் தூபம் போட்டது. இவர்களின் ஆதரவுடன் மகனை அரியணை ஏற்றியே தீருவது என்று பாஜகவுடனான 35 கால கொள்கை கூட்டணியை புதைத்தார் உத்தவ் தாக்கரே.


சிவசேனாவின் 56 எம்எல்ஏக்களும், தேசியவாத காங்கிரசின் 54 எம்எல்ஏக்களும், காங்கிரசின் 44 எம்எல்ஏக்களும் சேர்ந்து மொத்தம் 154 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால், பாலகனுக்கு பட்டாபிஷேகம் செய்துவிடலாம் என்று மனப்பால் குடித்து வந்தார் உத்தவ் தாக்கரே. சரத்பவாரின் பேச்சைக் கேட்டு நரேந்திர மோடி அரசில் அங்கம் வகித்த சிவசேனாவின் மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்தை ராஜினாமா செய்ய வைத்தார் அவர்.


புதுய கூட்டணி அமையும் என்ற நம்பிக்கையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் அவரது கட்சி தலைவர்களும், தேவேந்திர பட்னாவிசையும், பாஜக தலைவர்களையும் வாய்க்கு வந்தபடி வசைமாறி பொழிந்தனர். அவர்களுக்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா இவர்களைவிட தேவேந்திர பட்னாவிஸ்தான் முக்கிய எதிரியானார். காரணம் மகராஷ்டிராவில் சிவசேனாவைவிட பாஜகவை வளர்த்தவர் அவர். கடந்த சில தேர்தல் முடிவுகள் இதை பிரதிபலித்தது. இது உத்தவ் தாக்கரேவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால்தான் பட்னாவிசை அவர்கள் கரிந்துகொட்டினர். அவரை ஒழித்துக்கட்ட முடிவு செய்தனர்.


இதற்கிடையில் சிவசேனா, தேவியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைவது இறுதி வடிவத்தை எட்டியது. சிவசேனாவின் அதிப்தி எம்எல்ஏக்களை 17 பேர் கட்சியைவிட்டு வெளியேறும் முடிவுக்கு வந்தனர். அவர்களை உத்தவ் தாக்கரே நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினார். அதோடு சிவசேனா எம்எல்ஏக்கள் அனைவரையும் பாதுகாப்பாக ஓட்டலில் அடைத்து வைத்து இருந்தார்.


உத்தவ் தாக்கரேயும், சரத்பவாரும், சோனியாவும் கூட்டணியை இறுதி செய்தனர். உத்தவ் தாக்கரே முதல்வர் என்பதையும் சரத்பவார் அறிவித்தார். எந்த நேரத்திலும் ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என்ற நிலை இருந்தது.


இதற்கிடையே மகாராஷ்டிராவில் பாஜகவை அரியணையில் அமர வைத்த 49 வயது தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவின் அதிகார வெறியையும், சமீபத்திய சந்தர்ப்பவாத கூட்டணி பேரத்தையும் அமைதியாக இருந்து கவனித்து வந்தார். அவர் அரசியல் சதுரங்கத்தில் ரகசியமாக காயை நகர்த்தினார். முள்ளை முள்ளால் எடுப்பது போல, துரோகத்தை துரோகத்தால் வீழ்த்த முடிவு செய்தார்.


திரை மறைவில் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் அஜித் பவாரை தன்பக்கம் இழுத்தார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. அவரும் அதை ஏற்றுக்கொண்டார். தேவேந்திர பட்னாவிஸ் மிகத்திரமையாக காய்களை நகர்த்தி வெற்றியும் கண்டார்.


அடுத்த கட்டமாக, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு கவர்னரிடம் உரிமை கோருவதற்கு முன்பாகவே பிஜேபி கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர தீர்மானித்தார் பட்னாவிஸ்.


இரவு 11.55 மணிக்கு கவர்னரிடம் உரிமை கோரப்பட்டது. இதையடுத்து தனது டெல்லி பயணத்தை ரத்து செய்தார் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி.


காலை 5.30 மணிக்கு தேவேந்திர பட்னாவிஸ்சும், அஜித் பவாரும் கவர்னர் மாளிகைக்கு வந்தனர்.


காலை 5.47 மணிக்கு மகாராஷ்டிராவில் கவர்னர் ஆட்சி விலக்கிகொள்ளப்பட்டது.


காலை 7.50 மணிக்கு மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ்சும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதிவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி.




https://twitter.com/Dev_Fadnavis/status/1198087960798777345




https://twitter.com/CMOMaharashtra/status/1198086847026458624


காலை 8.10 மணிக்குதான் செய்தி வெளியே தெரிந்தது.


காலை 8.40 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது வாழ்த்து செய்தியில், “முதல்வராக பதவி ஏற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள அஜித் பவார் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். நீங்கள் மகாராஷ்ட்டிராவின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு கடுமையாக உழைப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/narendramodi/status/1198070368478515201


உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பட்னாவிஸ் அரசு மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து பாடுபடும்” என்றார்




https://twitter.com/AmitShah/status/1198075592521859077


இதைத்தொடர்ந்து மற்ற தலைவர்களும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல்,




https://twitter.com/nsitharaman/status/1198082422685880326




https://twitter.com/PiyushGoyal/status/1198138871684292609


இதுபோல, நாடுமுழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவாரை வாழ்த்தி வருகின்றனர்.


முதல்வர் கனவோடு தூங்கிய உத்தவ் தாக்கரேக்கு பேரிடியாக பொழுது விடிந்தது.


பட்னாவிஸ்சின் மாஸ்டர் ஸ்ட்ரோக்கால் நிலை குலைந்து போனது சரத் பவார் மட்டுமல்ல, சோனியாவும்தான்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News