Top
undefined
Begin typing your search above and press return to search.

முன்னாள் பிரதமர்கள் குடும்பத்தினருக்கு இனிமேல் சிறப்புப் பாதுகாப்பு கிடையாது! மக்களவையில் சட்ட திருத்த மசோதா தாக்கலாகிறது!

முன்னாள் பிரதமர்கள் குடும்பத்தினருக்கு இனிமேல் சிறப்புப் பாதுகாப்பு கிடையாது! மக்களவையில் சட்ட திருத்த மசோதா தாக்கலாகிறது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Nov 2019 7:49 AM GMT



சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) சட்டப்படி, பிரதமர், அவருடைய குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் பிரதமர்கள், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முன்னாள் பிரதமர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த பாதுகாப்பை விளக்கிக் கொள்வதற்காக அந்த சட்டத்தில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்துக்கு மத்திய மந்திரிசபை சென்ற 20-ந் தேதி ஒப்புதல் அளித்தது.


இதையடுத்து, இந்த திருத்தம் அடங்கிய சட்ட மசோதா, வரும் வாரம் நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதை நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வாலே மக்களவையில் தெரிவித்தார்.


சமீபத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு படை பாதுகாப்பு நீக்கப்பட்ட நிலையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.


Next Story