Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியின் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவித் திட்டம், தமிழக விவசாயிகள் 34 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்!

பிரதமர் மோடியின் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவித் திட்டம், தமிழக விவசாயிகள் 34 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Nov 2019 7:08 AM GMT


பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் ஆண்டுக்கு 6 ஆயிரம் பெற்ற தமிழகம் இருந்து 34 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் தெரிவித்துள்ளார்,இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,அதாவது பிரதமர் நரேந்திர மோடியின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் 6000 ரூபாய் நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகின்றன வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை மூலம் கணக்கெடுக்கப்பட்டு இத்திட்டம் இதுவரை சுமார் 34 லட்சம் பேர் தகுதியானா விவசாயிகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



அதன் புள்ளி விபரம் மத்திய அரசு இணையத்தில் மூன்று கட்டமாக சரிபார்க்கப்பட்டு 31 லட்சம் பயனாளிகள் இதுவரை மூன்று தவணைகளாக ரூபாய் 1727 கோடி நேரடியாக கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளதாக மீதமுள்ள பயனாளிகளுக்கு நிதியில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றார்.



Next Story