Top
undefined
Begin typing your search above and press return to search.

எங்களுக்கு 170க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது - கிரிஷ் மகாராஜன் பா.ஜ.க!

எங்களுக்கு 170க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது - கிரிஷ் மகாராஜன் பா.ஜ.க!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Nov 2019 5:30 AM GMT


மஹாராஷ்டிராவில்,  நடந்த சட்டசபை தேர்தலில், பாஜ.க,வுடன் கூட்டணியில் இருந்த சிவசேனாவின் ,ஆட்சியில் சமபங்கு கோரியதால் கூட்டணி முறிந்தது. இதனால், எந்த கட்சியும் பெரும்பாண்மை இல்லாததால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது ,பா.ஜ.க தனிபெரும்பான்மை கட்சியாக 105 இடங்களையும், சிவ சேனா கட்சி 56 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களையும் கைப்பற்றின.மகாராஷ்டிராவில் சிவசேனா ,தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி  இணைந்து ஆட்சி அமைப்பது என்ன கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன ஆனால் சரத் பவார் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்நிலையில் எதிர்பாராத விதமாக, பா.ஜ.க கட்சியின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் அஜித் பவாரும் மும்பையில் ஆளுநர் மாளிகையில் இன்று காலை பதவி ஏற்றனர்,இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பாஜகவை சேர்ந்த கிரிஷ் மகாராஜன்,எங்களுக்கு 170க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது தேசியவாத காங்கிரஸ் இன் சட்டமன்றத் தலைவர் அஜய் பவர் ,தங்களது அனைத்து எம்எல்ஏக்களும் கையெழுத்திடப்பட்ட கடிதத்தை ஆளுநரிடம் அஜித் பவர் கொடுத்துள்ளார்,என்று தெரிவித்துள்ளார்.


Next Story