Top
undefined
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க முத்த தலைவர் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கைலாஷ் ஜோஷி மறைவு - பிரதமர் மோடி இரங்கல்!

பா.ஜ.க முத்த தலைவர் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கைலாஷ் ஜோஷி மறைவு - பிரதமர் மோடி இரங்கல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Nov 2019 2:00 PM GMT


மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான கைலாஷ் சந்திரா ஜோஷி(90 வயது) நுரையீரல் மற்றும் நீரிழிவு பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். 1977-78 காலகட்டத்தில் 6 மாத காலம் மத்திய பிரதேச முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார் இவர்.


பா.ஜ.க-வை சேர்ந்த இவர் 1962 முதல் 1998 வரை பாக்லி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார். 2014 வரை போபால் தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.


கைலாஷ் சந்திரா ஜோஷியின் மறைவுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளனர். "மத்திய பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர்களில் குறிப்பிடத்தக்கவரான கைலாஷ் சந்திரா ஜோஷியின் மறைவு செய்தியை கேட்டு வேதனை அடைந்துள்ளேன். ஜனசங்கம் மற்றும் பா.ஜ.க-வை மத்திய இந்தியாவில் வளர்ப்பதற்கு அவர் அரும்பணி ஆற்றியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.




https://twitter.com/narendramodi/status/1198490341206134784?s=20

Next Story