Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னையில் சிட்டி யூனியன் வங்கியின் 116ம் ஆண்டு கொண்டாட்டம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னையில் சிட்டி யூனியன் வங்கியின் 116ம் ஆண்டு கொண்டாட்டம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Nov 2019 8:21 AM GMT


சிட்டி யூனியன் வங்கியின் 116ம் ஆண்டு நிறுவன தின கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சிட்டி யூனியன் வங்கியின் சிஇஓ மற்றும் மேலாண் இயக்குனர் காமகோடி உள்பட, ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:சிட்டி யூனியன் வங்கி 115 ஆண்டுகளை கடந்து 116ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிறுவனம் ஒரு நாள் கூட வேலை நிறுத்தம் இல்லாமல், எந்தவிதமான அவப்பெயரும் இல்லாமல் இயங்கி வருவது ஆச்சர்யத்துக்குரிய விஷயம்.ஒரு கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழலால், வங்கிகளில் பொதுமக்களின் பணம் பாதுகாப்பானதாக இருக்கிறதா என்ற கேள்விக்குறி எழுகிறது. நம் நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களை, நிறுவனம் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான உதாரணமாக சொல்கிறோம். நல்ல விஷயம் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது நம் பண்பாடு. சிட்டி யூனியன் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எந்த அளவுக்கு இருந்தால், இந்த அளவுக்கு ஒரு நிறுவனம் வளர்ந்திருக்க முடியும். அந்த வகையில் சிட்டி யூனியன் வங்கி பிற நிறுவனங்களுக்கு ஒரு உதாரணமாக உள்ளது.வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து, நடத்தப்படுவதால் மீண்டும் மீண்டும் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். தங்களின் நிலை அறிந்து சிட்டி யூனியன் வங்கி செயல்பட்டதால் தான், 116 ஆண்டுகளாக சிறந்த நிறுவனமாக தொடர்கிறது.


Next Story