Top
undefined
Begin typing your search above and press return to search.

ரயில்வே மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை பெற்றுள்ளனர், எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் உண்மைத் தகவல்கள்

ரயில்வே மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை பெற்றுள்ளனர்,   எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் உண்மைத் தகவல்கள்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Nov 2019 8:06 AM GMT


நாட்டின் பொருளாதாரம் எப்போதுமில்லாத அளவில் மந்தமாக இருப்பதாகவும் அதனால் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளதாகவும் எதிர்கட்சிகள் பொய்யான செய்திகளை திட்டமிட்டு பரப்பி வருகின்றன. ஆனால் உண்மை நிலவரம் அவ்வாறு இல்லை என்றும் ஏராளமான இளைஞர்களுக்கு படிப்படியாக வேலை வாய்ப்பு கிடைத்து வருவதாகவும், கிராமப்புறங்களில் கூட மக்களிடையே வாங்கும் சக்தி நல்லமுறையில் உள்ளதாகவும், ஒட்டுமொத்த இந்தியர்களின் வாழ்வு நல்லமுறையில் நடைபெற்று வருவதாகவும் ஆய்வு நிலவரங்கள் தெரியப்படுத்தியுள்ளன. மேலும் முன் எப்போதுமில்லாத வகையில் இந்தியர்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அதிக அளவில் மேற் கொண்டு வரும் சுற்றுலா பயணங்கள் குறித்தும் ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


வேலைவாய்ப்புகள் உருவாக்கம் கடந்த சில ஆண்டுகளாக மோடி அரசால் எவ்வாறு அணுகப்பட்டு வருகிறது என்பதையும், குறிப்பாக ரயில்வே துறை கடந்த சில ஆண்டுகளில் இலட்சக்கணக்கானோருக்கு வழங்கியுள்ள வேலை வாய்ப்பு மற்றும் ஸ்டார்ட் அப் நிறுனங்கள் மூலம் மோடி அரசு ஏற்படுத்தி வரும் கோடிக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை பற்றி இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.


வேலை வழங்குவதில் சிறப்பிடம் பெறும் ரயில்வே


உண்மையிலேயே பாஜக அரசு கடந்த சில ஆண்டுகளாக எடுத்த சிறப்பான முயற்சிகள் மற்றும் திட்டங்களால் பொருளாதார அபிவிருத்தி நிகழ்வுகள் நிறைய நடந்து வருகின்றன. இதன் மூலம் மக்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்க உதவுகின்றன. ரயில்வே, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் சமீபத்தில் அளித்த பதில், ரயில்வே எவ்வாறு வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.


இதன்படி 2018 ஆம் ஆண்டில் ரயில்வேயில் உள்ள பல்வேறு தொகுதிகளில் ‘சி’ கிரேடு பதவிகளுக்கான (லெவல் -1 உட்பட) 1.41 லட்சம் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் 2019 நவம்பர் 14 ஆம் தேதி வரை, சுமார் 73,500 பேருக்கு பணி அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் சுமார் 1.43 லட்சம் கூடுதல் காலியிடங்களுக்கான அறிவிப்பாணைகள் மேலும் நான்கு CEN கள் மூலம் (மையப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்புகள்) அறிவிக்கப்பட்டுள்ளன.


மேலும், ரயில்வே பாதுகாப்புப் படைகளில் உள்ள சுமார் 10,000 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் கான்ஸ்டபிள்களின் காலியிடங்களுக்காக 3 அறிவிப்பாணைகள் 2018 இல் CEN மூலம் வழங்கப்பட்டுள்ளன, அதற்கான ஆட்சேர்ப்பு பணிகள் நிறைவடைந்து அனைவரும் பணியில் சேர்ந்துள்ளனர்.


ரயில்வேயின் பல்வேறு தொகுதிகளில் ‘சி’ கிரேடு பதவிகளுக்கான (நிலை -1 உட்பட) மொத்தம் சுமார் 2.94 லட்சம் காலியிடங்கள் 2018 & 2019 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டுள்ளன.


தொழில்முனைவோர் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கம்


பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (பி.எம்.எம்.ஒய்) மூலம் பெறப்பட்ட கடன் திட்டங்கள் மூலம் ஏராளமான நிறுவனங்கள் பயனடைந்துள்ளன. இந்த நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் மொத்த வேலை வாய்ப்புகளில் 28 சதவீதம் வரை உயர வழிவகுத்துள்ளதாக சமீபத்திய அரசாங்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த முத்ரா திட்டத்தால் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியால் ஒரு கோடிக்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்பட்டன. கணக்கெடுப்பின்படி, மொத்தம் 11.2 மில்லியன் புதிய வேலைகள் 2015 ஆம் ஆண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டுக்கு இடையில் முத்ரா திட்டம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.


நவீனமயமாகி வரும் இந்த காலக் கட்டத்தில் அரசாங்கத்தின் செயல் திறன் அதிகம் கூடியுள்ள நிலையில் இனி பழைய கை வேலைகளால் மட்டும் வேலைகளை விரைவாக செய்ய முடியாது. அரசை மட்டுமே நம்பிக் கொண்டும் எல்லா விஷயங்களிலும் இருக்க முடியாது. எடுத்துக்காட்டாக, இன்றைய இளைஞர்களில் கணிசமான பகுதியினர் தங்கள் சொந்த உற்பத்தியில் ஏதேனும் ஒன்றைக் கண்டுபிடித்து விற்கக்கூடிய ஒரு சூழல் அமைப்பை விரும்புகிறார்கள். ஸ்டார்ட் அப் இந்தியா முன் முயற்சி மூலம், அரசாங்கம் அத்தகைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முன்வந்துள்ளது.


காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உட்பட எதிர்கட்சிகள் செய்து வரும் பொய்யான பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி அமோகமாக உள்ளது. ஆனால் அந்த உண்மைகளை எதிர்கட்சிகள் உண்மையில் மறைக்கின்றன. 2013 ஆம் ஆண்டில், யுவர்ஸ்டோரியின் ஒரு அறிக்கையில் ஸ்டார்ட் அப்களின் மொத்த முதலீடு 1.3 பில்லியன் டாலர் என்று கூறியது. அதேசமயம், 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 3.9 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடு இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் செய்யப்பட்டன. 2019 ஆம் ஆண்டின் முதல் அரை ஆண்டில் 2013 ஆண்டைவிட இரு மடங்கிற்கும் அதிகமான முதலீட்டை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஈர்த்தன. ஆனால் காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் ஸ்டார்ட் அப் ஈக்கோ -சிஸ்டத்தில் தவறான ஒரு காட்சியை உருவாக்கும் விதத்தில் நடந்து கொள்கின்றன.


பொதுவாக எந்த ஒரு நிறுவனமும் ஆரம்பத்தில் சில ஆண்டுகள் சோதனையான காலக் கட்டத்தை சமாளித்தாக வேண்டும். ஆனால் மத்திய அரசு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அததகைய சோதனையை தர விரும்பாமல் தொடக்கத்திலேயே ஊக்கத்தை தரும் வகையில் செயல்படுகிறது. இதன் மூலம் நல்ல ஒரு தொழில் சூழ்நிலையை அரசு உருவாக்கி வருகிறது. இதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு ஒரு நல்ல முன் மாதிரியாக திகழ்கிறது எனக் கூறலாம்.


சமீபத்தில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் ஒரு மிகப்பெரிய வாய்ப்புகளை தொடக்கநிலை நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் வாய்ப்புகளை வழங்குகிறது. இதன் மூலம் மாநில அரசுகளுடன் அவர்கள் இணைக்கப்பட்டு ஆயுஷ்மான் பாரத பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (ஏபி-பி.எம்.ஜே.ஏ) ஐ மிகவும் திறம்பட செயல்படுத்த தேசிய சுகாதார அதிகார சபையை நிறுவ உள்ளது. இதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகளையும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முன்னேற்றத்துக்காக அரசு அடிகோலி வருகிறது.


இதே போல பாதுகாப்புத் துறை மூலமும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு அந்த நிறுவனங்களை படைகளின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் அவர்களுடன் இணைத்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி தேர்த்தேடுக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு தலா ரூ. 1.5 கோடி அளிக்கப்பட்டு ஊக்குவிக்கபடுகின்றன.


ஆனால் இந்த உண்மைகள் அந்தந்த துறைகள் வெளியிடும் தகவல்கள் மற்றும் சில பத்திரிகைகளில் வெளியிடப்படும் ஆய்வு விபரங்கள் மூலம் வெளி வந்தாலும் பெரும்பாலான ஊடகங்கள் உண்மை தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. இதை அடிப்படையாகக் கொண்டு எதிர்கட்சிகள் மோடி அரசின் மீது களங்கம் கற்பிப்பதாக thetruepicture எனப்படும் உண்மைத் தகவல்களை வெளிப்படுத்தும் ஆய்வு சஞ்சிகை தனது இதழில் கருத்துக்களை தெரிவித்துள்ளது


Next Story