Top
undefined
Begin typing your search above and press return to search.

இதெல்லாம் ஒரு பொழப்பா.?? கல்லூரியில் பீகார்- காஷ்மீர் முஸ்லீம் மாணவர்கள் மோதிக்கொண்டதை "காஷ்மீரிகள் மீது தாக்குதல்" என்று அப்பட்டமாக திரித்து செய்தி வெளியிடும் முன்னணி ஊடகங்கள்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.?? கல்லூரியில் பீகார்- காஷ்மீர்  முஸ்லீம் மாணவர்கள் மோதிக்கொண்டதை "காஷ்மீரிகள் மீது தாக்குதல்" என்று அப்பட்டமாக திரித்து செய்தி வெளியிடும் முன்னணி ஊடகங்கள்!

MuruganandhamBy : Muruganandham

  |  25 Nov 2019 9:56 AM GMT


ராஜஸ்தான் மிவார் பல்கலைக் கழக பீகார் மற்றும் காஷ்மீர் முஸ்லீம் மாணவர்கள் தாக்கிக்கொண்ட சம்பவம், வேறு விதமாக திரிக்கப்பட்டு, ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.


ராஜஸ்தான் மீவார் பல்கலைக் கழகத்தில் சுமார் 30 காஷ்மீர் முஸ்லீம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் நான்கு மாணவர்கள் மீது 70 பேர் கொண்ட பீகார் முஸ்லீம்  மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


கேட்பாஸ் பிரச்சனையால் பீகார் மாணவர்களுக்கும் காஷ்மீர் மாணவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த தாக்குதல் நடத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


பாதிக்கப் பட்ட பிலால் அஹமது, இஷ்ஃபாக் அஹ்மது குரைஷி, முஹம்மது அலி மற்றும் தாஹிர் மஜீத் உள்ளிட்ட மாணவர்கள் ஆவர். இவர்களில் தாஹிர் மஜீத் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.


இந்த சம்பவத்தை அப்படியே திசை திருப்பிய பல முன்னணி செய்தி ஊடகங்கள், காஷ்மீர் மக்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்று ஜம்மு-காஷ்மீர் மக்கள் மீது அரசு அடக்குமுறையை ஏவி விட்டதை போல சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.


இதனை படிக்கும் மக்கள் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்துக்கு நீக்கப்பட்ட பிறகு, அரசே மக்கள் மீது தாக்குதல் நடத்துவது போல நினைக்க தோன்றும். இதற்காக திட்டமிட்டே நாட்டுக்கு எதிராக பிரிவினைவாத கருத்துக்களை பரப்பி வருகின்றன சில ஊடகங்கள்.


இதனையும் உண்மை என்று நம்பி, பல தேசிய கட்சி தலைவர்களும், பிரபலங்களும் பொய் தகவலை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.




https://twitter.com/SitaramYechury/status/1198506913857585152




https://twitter.com/SalmanNizami_/status/1198235707875061761




https://twitter.com/AskAnshul/status/1198571870250864641


கம்யூனிஸ்ட், திமுக மற்றும் காங்கிரஸ் சார்ந்த பல ஊடகங்கள் உண்மை செய்தியை மக்களுக்கு தராமல், இதுபோல போலியாக சித்தரித்த செய்திகளை மக்களிடம் பரப்பி, இந்தியா சிக்கலில் உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. தாங்கள் தான் அந்த சிக்கலில் இருந்து நாட்டை காக்க போகும் அவதார புருஷர்கள் என்ற மாய பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்துவருகின்றனர். இதனாலேயே சமீப காலமாக போலி செய்தி அதிகரித்துள்ளது.


Next Story