Kathir News
Begin typing your search above and press return to search.

நூல் அளவில் இழந்த ஆட்சி! மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்கப் போகிறதா பா.ஜ.க. ?

நூல் அளவில் இழந்த ஆட்சி! மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்கப் போகிறதா பா.ஜ.க. ?

நூல் அளவில் இழந்த ஆட்சி! மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்கப் போகிறதா பா.ஜ.க. ?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Nov 2019 9:02 AM GMT


மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, பா.ஜ.க. விடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது, நூல் அளவில் பா.ஜ.க. ஆட்சியை இழந்தது, 230 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் காங்கிரசுக்கு தற்போது 115 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 107 உறுப்பினர்களும் உள்ளனர். ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், சமாஜ்வாதி மற்றும் சுயேட்சைகள் அரசுக்கு ஆதரவாக உள்ளனர். முதல்வராக கமல்நாத் ஆட்சி நடந்து வருகிறது. கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்கும் முன்னரே மாநிலத்தின் முக்கிய தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவை முதல்வராக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர்.



இந்த நிலையில், ஜோதிராதித்ய தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னைப் பற்றிய தகவலை மாற்றியுள்ளார். முன்னாள் எம்.பி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் என்று இருந்த நிலையில், தற்போது அது வெறும் பொது ஊழியர், கிரிக்கெட் ஆர்வலர் என்று மாறியுள்ளது. மேலும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சுமார் 20 பேரை கட்சி தலைமையால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன,பெரும்பாலான அவர் பா.ஜ.க. வில் இணைய போவதாக கூறி வருகின்றனர். மகாராஷ்டிராவில் அரசியல் சூழல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் அரசியல் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News