Top
undefined
Begin typing your search above and press return to search.

இலங்கையில் ஆட்சி மாற்றத்தால், தமிழர்களுக்கு என்ன லாபம் ? ஐ.எஸ்.ஐ.எஸ் வேரறுக்கப்படுமா ?

இலங்கையில் ஆட்சி மாற்றத்தால், தமிழர்களுக்கு என்ன லாபம் ? ஐ.எஸ்.ஐ.எஸ் வேரறுக்கப்படுமா ?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Nov 2019 6:47 AM GMT


இலங்கையில்
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கோத்தபாய ராஜபக்ஷே 16 பேர்
கொண்ட இடைக்கால அமைச்சரவையை தேர்ந்தெடுத்து
வருகின்ற ஆகஸ்ட் மதத்திற்கு முன்
பாராளமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்தும்
மனநிலையில் உள்ளார்.


இலங்கையின்
ஜனாதிபதி பதவி 1992 இல் ஒரு
அலங்கார பதவியாக மட்டுமே இருந்தது
1978 இல் ஜெயவர்தானே காலத்தில்அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தும்
செய்யப்பட்டு அதிகாரம் பெற்ற பதவியாக மாற்றியமைக்கப்பட்டது. இலங்கையில்
அரசியல் அமைப்பு சட்டத்தை பொறுத்த
வரை பிரதமர் என்பவர்
ஜனாதிபதியின் ஆலோசகராகவே செயல்படுவார், ஆனாலும் ஜனாதிபதி தன்னிச்சையாக
பிரதமரை பதவி நீக்கம் செய்ய
முடியாத அளவிற்கு பிரதமருக்கு பாராளமன்றத்தில்
அதிகாரம் உள்ளது. கடந்த
2015 ஆம் ஆண்டு இந்த அதிகார
சர்ச்சை ஜனாதிபதி சிறிசேனவிற்கு பிரதமர்
ரணில் விக்ரமசிங்கேவிற்கும் வெடித்தது எல்லோருக்கும் தெரியும்


பிறகு நீந்தி மன்றம் தலையிட்டு
பாராளுமன்றத்தை பெரும்பான்மை இல்லாமல் தன்னிச்சையாக பிரதமரை
நீக்கியது அரசியல் சட்டத்துக் புறம்பானது
என்று கூறி குழப்பத்தை முடித்து வைத்தது. இது வரையிலும் இது
போன்ற அதிகார போட்டி, ஆத்ரிப்தி
மனப்பான்மை, பொருளாதார நலிவு, எல்லாவற்றிக்கும்
மேலாக "ஈஸ்டர் குண்டு வெடிப்பின்"
காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறை கடுமையான
பாதிப்பை சந்தித்தது, இதுவரையில் கேள்விப்படாத ஒன்றாக மத்திய கிழக்கிலும்
ஐரோப்பாவிலும் பரவி பந்த ஐசிஸ்
தீவிரவாத அமைப்பு மிகப்பெரிய சாதி
செயலை செய்து தன இருப்பை
நிலைநிறுத்தி கொண்டிருக்கிறது.


இந்த சூழ்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை
சேர்ந்தவர் மீண்டும் ஜனாதிபதி ஆவது
எந்த மாதிரியான சாதகங்களை இந்தியாவிற்கு
ஏற்படுத்தும் என்பதை பார்க்க வேண்டும். இலங்கையில்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியில்
இருக்கும்போதெல்லாம் இந்தியாவை காட்டிலும் சீனாவுடன்
தான் அதிகம் நெருக்கம் காட்டி
வந்திருக்கிறது.


மஹிந்த ராஜபக்ஷே ஆட்சியில் சீனாவிலிருந்து
கட்டுப்பாடற்ற முதலீடுகள் குவிந்த வண்ணம் இருந்தன,
அப்போது இந்தியவூடு சுமூக உறவு இருந்த
போதிலும், இந்தியாவின் எச்சரிக்கையும் பொருட்படுத்தாமல் சீனாவின்
இந்திய பெருங்கடல் ஆக்ரமிப்பு திட்டத்திற்கு உதவிகரமாக இருந்தது. இந்தியாவின் அனுதாபி என்று சொல்லப்பட்ட
சிறிசேன இல்லாத நிலையில் கோத்தபாய
ராஜபக்ஷேவை இந்திய எப்படி கையாள
போகிறது என்று பொறுத்திருந்து பார்க்க
வேண்டும்.


இந்தியாவிற்கு
சாதகமான விஷயங்கள் என்று பார்த்தால்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீவிரவாதத்திற்கு
எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இந்தியாவிலும்
இலங்கையிலும் புதிதாக முளைத்திருக்கும் ஐசிஸ்
தீவிரவாத அமைப்பை ஒடுக்க இந்தியாவுடன்
இணைந்து கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்
என்று எதிர்பார்க்கலாம். எல் டி
டி இ க்கு
எதிரான போரில் இந்தியாவுடன் அவர்கள்
ஒத்துழைத்தது போல் ஐசிஸ் கு
எதிரான நடவடிக்கையிலும் இலங்கையின் தீவிரமான ஒத்துழைப்பை எதிர்பார்க்கலாம்.


Next Story