Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்த ஆண்டும் அனைத்து பொங்கல் பொருள்களுடன் ரூ.1000 ரொக்கப் பரிசு! முதல்வர் அறிவிப்பால் முகம் மலர்ந்த மக்கள்!

இந்த ஆண்டும் அனைத்து பொங்கல் பொருள்களுடன் ரூ.1000 ரொக்கப் பரிசு! முதல்வர் அறிவிப்பால் முகம் மலர்ந்த மக்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Nov 2019 10:07 AM GMT


விழுப்புரம் மாவட்டத்தை 2 ஆக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தொடங்குவதற்கான அறிவிப்பு சென்ற சட்டசபை தொடரின் போது அறிவிக்கப்பட்டது.


இன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாவட்டத் தொடக்க விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, கடந்த ஆண்டைப் போலவே வருகின்ற பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்த ஆண்டும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை அடங்கிய பொருட்களுடன் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றார்.


இந்த பரிசுத் தொகுப்பை அனைத்து அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தார்கள் அனைவரும் பெறலாம், எனவும் அறிவித்தார். ஏற்கனவே இந்த ஆண்டு பொங்கல் பரிசு இல்லை என எதிர்க்கட்சி ஊடகங்கள் வதந்தி பரப்பி வரும் நிலையில் முதல்வரே தனது வாயால் உண்டு என கூறியதை அடுத்து விழாவுக்கு வந்திருந்த மக்கள் முகம் மலர்ந்தது.


Next Story