Kathir News
Begin typing your search above and press return to search.

பாப்ரி மஸ்ஜித்தின் பெயர் முஸ்லிம் சொத்துக்கள் பட்டியலில் இருந்து நீக்கம்!! சன்னி வக்ஃப் வாரியம் முடிவு !

பாப்ரி மஸ்ஜித்தின் பெயர் முஸ்லிம் சொத்துக்கள் பட்டியலில் இருந்து நீக்கம்!! சன்னி வக்ஃப் வாரியம் முடிவு !

பாப்ரி மஸ்ஜித்தின் பெயர் முஸ்லிம் சொத்துக்கள் பட்டியலில் இருந்து நீக்கம்!! சன்னி வக்ஃப் வாரியம் முடிவு !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Nov 2019 5:08 AM GMT


அயோத்தியில் இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமஜென்ம பூமியாக ஏற்றுக் கொண்டு ஸ்ரீராமர் கோவில் கட்டுவதற்கான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் 2 வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்ட சன்னி வக்ஃப் வாரியம் தனது சொத்துக்கள் பட்டியலில் இருந்து பாப்ரி மஸ்ஜித்தின் பெயரை நீக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.


சன்னி மத்திய வக்ஃப் வாரியத்தின் பதிவேட்டின்படி அதன் கட்டுப்பாட்டில் 1 லட்சத்து 23 ஆயிரம் சொத்துக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. சமீபத்திய சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பாப்ரி மஸ்ஜித் தங்களுக்கு இல்லை என்பது உறுதிப்பபடுத்தப்பதை அடுத்தும்,அதற்கு பதிலாக வேறு ஒரு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என அறிவித்ததை அடுத்தும் சன்னி மத்திய வக்ஃப் வாரியம் இந்த முடிவுக்கு வந்ததாகவும், எனவே சொத்துக்கள் பட்டியலில் இருந்து பாபர்மஸ்ஜித் பெயரை நீக்கும் சட்டபூர்வ பணிகளை வக்ஃப் வாரியம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.


கடந்த 1944 ஆம் ஆண்டில் இருந்து பாப்ரி மஸ்ஜீத் சன்னி மத்திய வக்ஃப் வாரிய சொத்துக்கள் பட்டியலில் இருந்து வருகிறது. தற்போது இடிக்கப்பட்ட மசூதி, வாரியத்தின் ஆவணங்களில் ‘பாப்ரி மஸ்ஜித், அயோத்தி, பைசாபாத் மாவட்டம்’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், 8 உறுப்பினர்கள் அடங்கிய சன்னி மத்திய வக்ஃப் வாரிய குழு இன்று (நவம்பர் 26 ஆம் தேதி) லக்னோவில் கூடி பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளது.


மறுஆய்வு மனு


சுன்னி மத்திய வக்ஃப் வாரியம் இன்றைய கூட்டத்தில் உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பை ஏற்றுக் கொள்ளலாமா அல்லது மறுஆய்வு மனுக்களை தாக்கல் செய்யலாமா என்பது குறித்து விவாதிக்கும் எனதெரிகிறது . எனினும் வாரியத் தலைவர் ஜாபர் ஃபாரூகி ஏற்கனவே எந்தவொரு மறுஆய்வு மனுவையும் தாக்கல் செய்ய மாட்டோம் என்று கூறியிருந்தார்.


மேலும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியபடி அரசு அளிக்கும் 5 ஏக்கர் நிலத்தை பெறலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்தும் இன்று அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். என்றாலும் வாரிய தலைவர்கள் மற்றும் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசு அளிக்கும் நிலத்தை ஏற்றுக் கொள்வதுதான் நல்லது என முடிவுசெய்துள்ளதாகவும், அந்த புதிய இடத்தில் ஒரு மசூதியுடன் கூடிய மருத்துவமனை அல்லது கல்வி நிலையம் அமைப்பது குறித்தும் பேசுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News