Top
undefined
Begin typing your search above and press return to search.

மாற்றுத்திறனாளி சிறுமிகள் பாதிரியார்களால் கற்பழிப்பு-நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

மாற்றுத்திறனாளி சிறுமிகள் பாதிரியார்களால் கற்பழிப்பு-நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

saravanaBy : saravana

  |  26 Nov 2019 5:34 AM GMT


கிருஸ்துவ அமைப்புகள் நடத்தி வரும் காப்பகம் மென்டோஸ் நகரில் இயங்கி வந்தது. இங்கு இருக்கும் மாற்றுத்திறனாளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக புகார் எழுந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்றது. தீவிர விசாரணை நடத்திய காவல் துறை பாலியல் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என உறுதி செய்தது.


இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் காப்பகத்தை கண்காணித்து வந்த பாதிரியார்கள் குரோஷியோ கார்பச்சோ , நிக்கோலா கொர்ராடி ஆகிய 2 பேரும் அங்கு உள்ள வாய்பேசமுடியாத சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதுவும் 80 வயதிற்கு மேலே உள்ள பாதிரியார்கள் இச்செயலை செய்திருப்பது கிறிஸ்த்துவ அமைப்புகளை கொதிப்படைய செய்துள்ளது.


3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கானது நேற்று முடிவுக்கு வந்தது. அப்போது அங்கு பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் இருந்தனர். தீர்ப்பு வசிக்கும் போது கண்ணீர் விட்டு கதறி உள்ளனர் இது அங்கு இருந்தவர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்தது. வாய்பேச முடியாமல் கதறி அழுத சிறுமிகள் நெஞ்சை உலுக்குவதாக அமைந்தது.


அப்போது பேசிய ஒரு சிறுமியின் தந்தை காது வாய் பேச முடியாத சிறுமிகளை பலாத்காரம் செய்த காப்பகத்தை தேவாலய நிர்வாகம் மறைக்க முயன்றது. பாதிரியர்களை காப்பாற்ற முயற்சிக்கிறது. " என பாதித்த பெண்ணின் தந்தை ஒருவர் கூறினார்.


நீதிமன்றம் தனது தீர்ப்பில் பாதிரியார்கள் குரோஷியோ கார்பச்சோ, நிக்கோலா கொர்ராடி ஆகிய 2 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்துள்ளது. இதில் கார்பச்சோவுக்கு 45 வருட சிறைத்தண்டனையும், கொர்ராடிக்கு 42 வருட சிறைத்தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.


பாதிரியார் கொர்ராடி என்பவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் . 1970 ஆண்டே இவர் மீது பாலியல் புகார் எழுந்தது. ஆனால் அதை மறைத்தது தேவாலய நிர்வாகம்


கேரளாவில் நடைபெற்ற பாலியல் சம்பவம்


கேரள மாநிலத்தில் பாதிரியார் பிரான்கோ முல்லக்கல் என்பவர் கன்னியாஸ்திரி ஒருவரை பலாத்காரம் செய்தார். இவரை இதை மூடி மறைக்க பல்வேறு வேலைகள் நடந்தது.கன்னியாஸ்திரி நீதிமன்றம் ஏறினார்.பின் பாதிரியார் பிரான்கோ முல்லக்கல் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.ஒரு ஆய்வில் கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் காப்பகத்தில் இது போன்ற பாலியல் வன்கொடுமைகள் உலக அளவில் அதிகமாகி வருவதாக தெரிவித்துள்ளது


Next Story