Top
undefined
Begin typing your search above and press return to search.

ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை ஆர்.எஸ்.எஸ் தலைவர் தலைமையில் இருக்க வேண்டும் - மூத்த சன்யாசி பேட்டி!

ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை ஆர்.எஸ்.எஸ் தலைவர் தலைமையில் இருக்க வேண்டும் - மூத்த சன்யாசி பேட்டி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Nov 2019 9:50 AM GMT


ராமஜென்ம பூமியில் ஸ்ரீ ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை இன்னும் 3 மாத காலத்துக்குள் அமைத்து பணிகளை தொடங்க வேண்டும் என அயோத்தி தொடர்பான தீர்ப்பில் 2 வாரங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட் கூறியது.


இந்த நிலையில் ஸ்ரீ ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளைக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமை தாங்க வேண்டும் என்று அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியின் மூத்த சுவாமிகளும், தபஸ்விஜி சாவானியின் மஹந்தருமான பரம்ஹான்ஸ் தாஸ் மகாராஜ் தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே இருந்த அறக்கட்டளைக்கு முன்னாள் அலுவலராக ஆர்.எஸ்.எஸ் தலைவர் இருந்த நிலையில், தற்போது மீண்டும் ஆர்எஸ்எஸ் தலைவர்தான் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கோயிலின் கட்டுமானப் பொறுப்பை சங்கப் பரிவாருக்கு வழங்குவதே நல்லது என்றும் மஹந்த் திங்களன்று படோஹியில் உள்ள சீதா சமாஹித் ஸ்தலத்தில் இருந்து செய்தியாளர்களிடம் கூறினார்.


இக்கருத்தைக் கூறிய பரம்ஹான்ஸ்ஜி மகாராஜ், ஏற்கனவே ராம் ஜன்மபூமி நியாஸ் தலைவர் நிருத்யா கோபால் தாஸ் மற்றும் அதன் உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்தவர் ஆவார். அவர்கள் இருவருக்கும் மிகவும் குறுகிய மனப்பான்மை இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.


மேலும் அவர் கூறுகையில் ராமர் கோவில் விவகாரத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றது ஆர்எஸ்எஸ் தான். அவர்கள் போல இந்த விவகாரத்தை யாரும் செய்ய முடியாது. என்று கூறிய அவர், பிரதமர், உள்துறை மந்திரி மற்றும் பாதுகாப்பு மந்திரி அனைவருமே சங்கத்தில் தோன்றியவர்கள்தான்  என்றும் பெருமையாகக் கூறினார்.


Translated Article From OPINDIA


Next Story