Top
undefined
Begin typing your search above and press return to search.

ஒரே ஆண்டில் 9 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதியை வழங்கிய பிரதமருக்கு - எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம்!

ஒரே ஆண்டில் 9 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு  அனுமதியை வழங்கிய பிரதமருக்கு - எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Nov 2019 11:07 AM GMT


தருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய கடந்த மாதம் 6 புதிய மருத்துவ கல்லூரிகள்  அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது,ஒவ்வொரு மருத்துவ கல்லூரிகளுக்கும் தலா  325 கோடி செலவில் மத்திய அரசு பங்காக 60 சதவீதமும் மாநில அரசின் பங்காக 40 சதவீதமும்,செலவில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது,இந்நிலையில் மத்திய அமைச்சரவை நேற்று கூடியது அந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக மூன்று மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.


 தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், இந்த ஆண்டு மட்டும் தமிழகத்திற்கு மட்டும் 9 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.



இதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம்,மேலும் 3 புதிய கல்லூரிகளை அமைக்க,மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டத்தில் ஒப்புதல் அளித்து,ஒரே ஆண்டில் 9 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு  அனுமதியை வழங்கிய பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்  


Next Story