Top
undefined
Begin typing your search above and press return to search.

திருமாவளவன் கட்சியினர் கொலை மிரட்டல்! போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராம் புகார்!

திருமாவளவன் கட்சியினர் கொலை மிரட்டல்! போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராம் புகார்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Nov 2019 9:38 AM GMT


திருமாவளவன், இந்து தெய்வங்களை இழிவாக விமர்சித்துப் பேசியதற்கு நடிகை காயத்ரி ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டார். “திருமாவளவனை எங்குபார்த்தாலும் இந்துக்கள், செருப்பால் அடிக்க வேண்டும்” என்று கருத்து பதிவிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.


இதனைத்தொடர்ந்து திருமாவளவனின் கட்சியினர், காயத்ரி ரகுராமை தொலைபேசியில் தொடர்புகொண்டு மிகவும் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசினார்கள். அந்த தொலைபேசி உரையாடல்களை காயத்ரி ரகுராம், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது திருமாவளவனின் கட்சியினரின் கீழ்த்தரமான நடவடிக்கைகளை மக்களுக்கு தோலுரித்து காட்டியது.


காயத்ரி ரகுராம் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் திருமாவளவன் கட்சியின் கூடி, மிரட்டல் விடுத்தனர்.


இதனைத்தொடர்ந்து நடிகை காயத்ரி ரகுராமை, கண்டித்து கருத்து வெளியிட்ட திருமாவளவன், ஒட்டுமொத்த நடிகைகளையும் “அவுத்துப் போட்டு ஆடுபவர்கள்” என்று மிக கீழ்த்தரமான, வக்கிரமான முறையில் விமர்சனம் செய்தார். இது ஒட்டுமொத்த பெண்களையும் இழிவு படுத்துகின்ற செயல் என்பதால், பெண்கள் மத்தியில் கடும் கண்டனத்திற்கு ஆளானார் திருமாவளவன்.


இதன் பின்னரும் காயத்ரி ரகுராமிற்கு திருமாவளவன் கட்சியினர் கொலை மிரட்டல் விடுவது தொடர்ந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து காயத்ரி ரகுராம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில் காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது:-


திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் திருமாவளவனுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் உள்ள மர்ம நபர்கள் எனது தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அவர்கள் ஆபாசமாக திட்டியும், கீழ்த்தரமாக பேசியும் வருகின்றனர்.


திருமாவளவனின் ஆட்களால், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கும், என் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு காயத்ரி ரகுராம் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story