Top
undefined
Begin typing your search above and press return to search.

3 நாள் ஆட்சியில் இருந்தாலும், சாதித்து காட்டிய பா.ஜ.க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் - ரூ.5380 கோடியை விவசாயிகளுக்கு விடுவித்த பின்னரே ராஜினாமா!

3 நாள் ஆட்சியில் இருந்தாலும், சாதித்து காட்டிய பா.ஜ.க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் - ரூ.5380 கோடியை விவசாயிகளுக்கு விடுவித்த பின்னரே ராஜினாமா!

MuruganandhamBy : Muruganandham

  |  27 Nov 2019 6:39 AM GMT


மஹாராஷ்டிரா மாநிலத்தில், தேர்தலை தொடர்ந்து ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து, கடந்த நவம்பர் 23 ஆம் தேதி இரண்டாவது முறையாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், சிவசேனா கட்சி தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டு பதவியேற்ற நான்காவது நாளில் தனது பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்.


இருந்த போதிலும் 3 நாட்களுக்குள் தன்னால் இயன்ற அளவுக்கு உதவி செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் தேவேந்திர பட்னாவிஸ். மகராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் பெய்த பருவம் தவறிய மழையால் ஏராளமான விளைபயிர்கள் நாசமானது. கிட்டத்தட்ட 34 மாவட்டங்களில் உள்ள 352 தாலுகாக்களில் 94.53 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு பயிர்கள் நாசமானதாக கூறப்படுகிறது. விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர்.


ஜனாதிபாதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட போது கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி சேதமடைந்த 2 ஹெக்டேர் நெல், கோதுமை உள்ளிட்ட பயிர்களுக்கு ரூ.8 ஆயிரமும், தோட்டக்கலை பயிர்களுக்கு 2 ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரமும் நிவாரணம் அறிவித்திருந்தார். அதற்கு பிறகு பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரத்து 380 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.


ஏற்கனவே கடந்த 2 ஆம் தேதி காபந்து முதல்வராக பதவி வகித்து வந்த தேவேந்திர பட்னாவிஸ் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிவாரணம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட Kusum Vengurlekar என்பவருக்கு 1.2 இலட்சம் நிதி ஒதுக்கிடு செய்தார்.


Next Story