Top
undefined
Begin typing your search above and press return to search.

திகாரில் ப.சிதம்பரத்திற்கு 100-வது நாள்! கார்த்தி சிதம்பரத்திற்கு அறை தயாராகிறது!

திகாரில் ப.சிதம்பரத்திற்கு 100-வது நாள்! கார்த்தி சிதம்பரத்திற்கு அறை தயாராகிறது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Nov 2019 11:40 AM GMT


ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு இன்று 100- வது நாள். ‌ அவர் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற படிகளை ஏரி இறங்கி வருகிறார். ஆனால் அவருக்கு இதுவரை ஜாமீன் மறுக்கப்பட்டு வந்துள்ளது.


அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை கட்டி ஜாமீன் கேட்டார். அது நிராகரிக்கப்பட்டது. உடல் எடை குறைந்து விட்டது என்று நாடகம் போட்டு பார்த்தார். அதுவும் எடுபடாமல் போய்விட்டது. திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டது முதல் இன்றுவரை ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணங்களை சொல்லி ஜாமீன் கேட்டார். ஆனால் இதுவரை அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.


ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன வழக்கு மட்டுமல்லாமல், மேலும் 16 நிறுவனங்கள் பண மோசடி வழக்கில் ப.சிதம்பரத்திற்கும், அவரது மகனுக்கும் தொடர்பு உள்ளது. 12 வெளிநாட்டு வங்கி கணக்குகள், 16 நாடுகளில் உள்ள சொத்துக்களில் ப.சிதம்பரத்திற்கும், கார்த்தி சிதமப்பரத்திற்கும் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.


இந்த நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதோடு கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத் துறை துரிதப்படுத்தி உள்ளது.


எனவே கார்த்தி சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம். அவருக்காக திகார் ஜெயிலில் அறை தயாராகிவருகிறது.


Next Story