Top
undefined
Begin typing your search above and press return to search.

இ-சிகரெட் தடை விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது!

இ-சிகரெட்  தடை விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Nov 2019 12:48 PM GMT


இ- சிகரெட்டுகள் தடை விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்த நிலையில்  இ-சிகரெட்டுகளை தடைசெய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதத்தில் பிறப்பித்தது,இதற்கு பதிலாக சட்டம் இயற்ற இ-சிகரெட் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது அந்த வகையில் வெள்ளிக்கிழமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இ-சிகரெட் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் ‘எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தடை தயாரிப்பு, உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, வினியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரப்படுத்துதல் மசோதா’ எனப்படும் இந்த மசோதா மீது  விவாதம் நடந்தது.



 இந்த விவாதங்களுக்கு சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் பதிலளித்து நேற்று பேசினார்.பேஷன் என்ற பெயரில் இப்போது புதிய போதைப் பொருள்களுக்கு இளைஞர்கள் அடிமையாகின்றனர் என்று தெரிவித்தார்,அடிமையாவதை தடுக்க வேண்டியது அவசியம் என்று கூறினார் இதனைத் தொடர்ந்து இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது இதற்கு ஆளும் கட்சியினர் மட்டும் என்று எதிர்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர், இ-சிகரெட்டுகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டு சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்க இந்த மசோதா வகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story