Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரிட்டனில் வளர்ந்து வரும் "இஸ்லாமாபோபியா"!

பிரிட்டனில் வளர்ந்து வரும் இஸ்லாமாபோபியா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Nov 2019 11:04 AM GMT


இஸ்லாமாபோபியா என்கிற வார்த்தை இன்றைக்கு இங்கிலாந்தில் விவாதப்பொருளாளாக மாறியிருக்கிறது. இஸ்லாம் மத பரவுதல் யுரோப்பில் மற்ற எல்ல நாடுகளையும் விட இங்கிலாந்தில் அதிகமாக பரவி வருகிறது. மேலும் அங்கு சில முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் "ஷெரியட் பெட்ரோல் " என்று சொல்லிக்கொள்ளும் முஸ்லீம் இளைஞர்களை கொண்ட ரோந்து குழுக்கள் முஸ்லீம் அல்லாதவர்களை கடுமையாக நடத்தும் சம்பவங்களும் நடந்திருக்கிறது.


இந்த சூழ்நிலையில் பிரிட்டனின் புதிய அதிபர் போரிஸ் ஜோன்சன் முசுலிம்கள் அணியும் புர்கா பற்றி கூறிய கருது கடும் எதிர்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் ஐந்து ஆண்டுகளாக நடந்து வரும் சிரியா யுத்தத்தில் வெளியேறிய பல லட்சம் முஸ்லீம் அகதிகளை எந்த முஸ்லீம் நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த அகதிகளை ஐரோப்பிய உணின் நாடுகள் ஏற்றுக்கொண்டு அடைக்கலம் தந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் ஐசிஸ் தீவிரவாத இயக்கம் மத்திய கிழக்கில் வலிமை இழந்து ஐரோப்பிய நாடுகளில் பரவியது.


ஐரோப்பாவின் மற்ற நாடுகளை விட இங்கிலாந்தில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த சூழலில் இங்கிலாந்து பிரதமர் புர்கா பற்றி தெரிவித்த கருத்துக்கு இங்கிலாந்தின் இஸ்லாமிய கவுன்சில் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. பிரதமரின் கான்செர்வ்டிவ் கட்சி முஸ்லிம்களுக்கு எதிராகவே இருப்பதாகவும், சிலர் செய்யும் தவறுகளின் விளைவை அப்பாவி இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறதாகவும் இஸ்லாமிய கவுன்சில் கண்டனம் தெரிவித்திருக்கிறது.


பிரதமர் போரிஸ் ஜோன்சன் தான் தெரிவித்த கருத்து வெறும் நடைச்சுவைக்காகவே என்று கூறினாலும் இது போன்ற பேச்சுகளுக்கு அவர் பெயர்போனவர். இஸ்லாமிய பயங்கரவாதத்தின் காயங்களை ஏற்கனவே சுமந்திருக்கும் பிரிட்டன் தற்போது பொறுப்பேற்றிருக்கும் போரிஸ் ஜோன்ஸனின் பேச்சுக்களால் எத்தகைய எதிர்காலத்தை சந்திக்கவிருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Next Story