Top
undefined
Begin typing your search above and press return to search.

மகாத்மா காந்தி கொலையாளி – பயங்கரவாதி; ராஜீவ் காந்தி கொலையாளிகள் - தியாகிகள்! கிழிந்தது தமிழின வியாபாரிகளின் முகத்திரை!

மகாத்மா காந்தி கொலையாளி – பயங்கரவாதி; ராஜீவ் காந்தி கொலையாளிகள் - தியாகிகள்! கிழிந்தது தமிழின வியாபாரிகளின் முகத்திரை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Nov 2019 9:46 AM GMT


சிறப்பு பாதுகாப்பு படை திருத்த மசோதா நேற்று (27.11.2019) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக எம்பி ஆ.ராசா, சோனியா காந்தி உயிருக்கு ஆபத்து உள்ளதால், அவருக்கு எஸ்.பி.ஜி எனப்படும் உயர்ந்த பச்ச பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட வேண்டுமென்று கோரினார்.


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி சோனியா காந்தி மற்றும் மகன் ராகுல் மகள் பிரியங்கா மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2009-ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசின் முழு ஆதரவோடு, இலங்கையில் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன. அதோடு 1,75,000 அப்பாவி தமிழர்களும் கொன்று புதைக்கப்பட்டனர்.


இந்த நிலையில் இல்லாத விடுதலைப்புலிகளால், சோனியா காந்தி உயிருக்கு ஆபத்து என்பது கேலிக்கூத்தான ஒன்று. மேலும் வெட்டி பந்தாவுக்காக முன்னாள் பிரதமரின் உறவினர் என்ற வகையில் ராபர்ட் வத்ரா குடும்பம் வரைக்கும் மக்கள் வரிப்பணத்தில் உச்ச கட்ட பாதுகாப்பை பல ஆண்டுகளாக அளிப்பது என்பது தேவையற்றது என்ற மக்கள் விருப்பத்தையும், தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் குழுவின் பரிந்துரையையும் ஏற்று சிறப்பு பாதுகாப்பு படை திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.


இது ஒருபுறமிருக்க, ராஜீவ்காந்தி கொலையாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ராஜீவ் காந்தியின் மகன், ராகுல் காந்தி கூறியுள்ளார். அதேபோல கடந்த பல ஆண்டுகளாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், வைகோ, தமிழர் கட்சி தலைவர் சீமான், கி.வீரமணி வகையறாக்கள், தமிழகத்தில் உள்ள ஏராளமான தமிழின வியாபாரிகள், ராஜீவ்காந்தி கொலையாளிகள்7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஒத்த குரலில் போராடி வருகின்றனர்.


இந்த நிலையில்தான், பாராளுமன்றத்தில் நடந்த சிறப்பு பாதுகாப்புப் படை திருத்த மசோதாவின் மீதான விவாதத்தில் பேசிய ஆர்.ராசா, சோனியா காந்தி உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து உள்ளது. அதனால் அவருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி பேசியுள்ளார். ஏற்கனவே திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலுவும், “விடுதலைப்புலிகளால், சோனியா காந்தி உயிருக்கு ஆபத்து உள்ளது. அதனால் அவரது குடும்பத்துக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்” என்று பேசினார்.


ஆ.ராசா பேசும்போது, “ 32 ஆண்டுகள் வெறுப்பு இருந்ததால்தான், மகாத்மா காந்தியை கோட்சே கொன்றார்” என்று குறிப்பிட்டு பேசினார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பி பிரக்யா தாகூர் பேசினார். அப்போது அவர், “நீங்கள் ஒரு தேசபக்தரை, உதாரணமாக கூற கூடாது” என்றார்.


அவர் கோட்சேயின் பெயரை குறிப்பிடாமல் இருந்தாலும் “கோட்சேயை எப்படி தேசபக்தர் என்று கூறலாம்? அவர் ஒரு பயங்கரவாதி, தேசத் துரோகி?” என்று திமுகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் பொங்கி எழுந்தனர். இவர்களுக்கு ஆதரவாக திருமாவளவன், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சியினர், தி.க. மற்றும் பல உதிரி கட்சியினர் இணைந்து நேற்று முதல் தொடர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


இவர்கள் அனைவரும், ஒருமித்த குரலில், “மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே ஒரு பயங்கரவாதி. அவர் ஒரு தேசதுரோகி. அவரை எப்படி தேசபக்தன் என்று கூறலாம்?” என்கின்றனர்.


இதில் வேடிக்கை என்னவென்றால், ராஜீவ் காந்தி கொலையாளிகளை தியாகிகளாக கொண்டாடும் கும்பல்களுக்கு ஆதரவாக பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய ராகுல் காந்தி, "பயங்கரவாதி கோட்சேவை தேசபக்தர் என்று பிரக்யா கூறியுள்ளார். இது இந்திய பாராளுமன்ற வரலாற்றில் துன்பமிக தினம்” என்று வர்ணித்துள்ளார்.


அதாவது மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே பயங்கரவாதி. இதைத்தான் திமுக உள்பட அனைத்து தமிழக கட்சிகளும் ஒரே குரலில் கூறுகின்றன. ஆனால் அதேநேரம், இந்தக் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ராஜீவ்காந்தி கொலையாளிகள் தியாகிகள் என்று கொண்டாடி மகிழ்கின்றன. ராஜீவ் காந்தி கொலையில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று டெல்லி வரை சென்று போராடுகின்றனர்.


மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே பயங்கரவாதி, தேசத்துரோகி. ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற பயங்கரவாதிகள் எப்படி தியாகிகள் ஆனார்கள்?


மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், கி.விரமணி, சீமான் உள்பட அனைத்து தமிழின வியாபார தலைவர்களும், எதற்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையாளிகளை தியாகிகளாக சித்தரிக்கிறார்கள்? அவர்களை கதாநாயகர்களாக ஏன் தூக்கிப் பிடிக்கிறார்கள்?


இதுபோன்ற கேள்விகளுக்கான விடைகளை தேடும் பணிகளில் தமிழர்கள் இறங்கிவிட்டனர். இதன் மூலம் தமிழையும், தமிழ் இனத்தையும் வைத்து பிழைப்பு நடத்தும் வியாபாரிகளின் முகத்திரை கழிக்கப்பட்டு வருகிறது.


Next Story