Top
undefined
Begin typing your search above and press return to search.

பிங்க் பந்து கிரிக்கெட் போட்டி - பி.சி.சி.ஐ தலைவர் சௌரவ் கங்குலி!

பிங்க் பந்து கிரிக்கெட் போட்டி - பி.சி.சி.ஐ தலைவர் சௌரவ் கங்குலி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Nov 2019 10:32 AM GMT


பி.சி.சி.ஐ -யின் 39 ஆவது தலைவராக சௌரவ் கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டு சில நாட்களிலேயே கொல்கத்தாவில் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட்டை நடத்தியுள்ளார். அதுவும் இந்தியாவில் முதன் முறையாக பிங்க் பந்து இந்த போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பி.சி.சி.ஐ -யின் தலைமையை பொறுத்த வரை முன்னாள் கிரிக்கெட் வீரர் தலைமை ஏற்பது கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


பி.சி.சி.ஐ ஒரு சாதாரண கிளப் ஆகா இருந்து இன்றைக்கு உலகிலேயே அதிகம் பணம் கொழிக்கும் அமைப்பாக உள்ளது. இந்திய பிரிமியர் லகுக்கே என்று அழைக்கப்பட்ட உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற போது இந்த அமைப்பின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்து. தொடர்ச்சியாக இதன் தலைமை பொறுப்பை வகித்தவர்கள் வர்த்தக உலகை சேர்ந்தவர்களாக இருந்ததால் இதன் பண பரிவர்த்தனை வரைமுறையற்று நடந்து நிறய முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்து பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இது ஒரு புறம் இருக்க இந்திய அணி வீரர்களின் திறன் வளர்ச்சிக்காக எந்த திடமான முயற்சியும் பி.சி.சி.ஐ எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பயிற்சியாளர்கள் நியமன பிரச்சனைகளில் இருந்து ஓய்வில்லாத வெளிநாட்டு கிரிக்கெட் தொடர் ஒப்பந்தங்கள், வீரர்கள் தேர்வு என்று இந்திய அணியோடு மட்டும் அல்லாமல் சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலான இ சி சி உடனும் உரசல் போக்கையே கடைபிடித்து வந்தது. இந்த சூழலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி பி.சி.சி.ஐ -யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.


இவர் பத்தி ஏற்ற உடன் கொல்கத்தாவில் பிங்க் டெஸ்ட் கிரிக்கெட் ஏற்பாடு செய்யப்பத்து. இந்த போட்டியில் இந்தியாவில் முதன் முறையாக பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டது. இந்த நிற பந்துகள் பகல் இரவு ஆட்டங்களில் இரவு நிறத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பந்துகளை விட தெளிவாக தெரிய கூடியவை.


Next Story