Top
undefined
Begin typing your search above and press return to search.

ராகுல் காந்தி சிறப்பு பாதுகாப்புப் படையினருக்கு தெரிவிக்காமல் வெளிநாடுகளுக்கு பயணம் - அமித்ஷா!

ராகுல் காந்தி சிறப்பு பாதுகாப்புப் படையினருக்கு தெரிவிக்காமல் வெளிநாடுகளுக்கு பயணம் - அமித்ஷா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Nov 2019 7:24 AM GMT


சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அவருடைய மகன் ராகுல் காந்தி மகள் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்புப் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது, Z+பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் சிறப்பு பாதுகாப்பு படை திரும்பப் பெறப்பட்டது நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர் ,வெளிநடப்பு செய்து வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்,திமுகவை சேர்ந்த டிஆர் பாலு சோனியாவுக்கு சிறப்பு படை பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது எதிர்ப்பும் தெரிவித்தார் சோனியாவுக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.



இந்நிலையில் சிறப்பு பாதுகாப்பு குழு திருத்த மசோதா நேற்று அறிமுகம் செய்யப்பட்டு இன்று விவாதம் நடைபெற்ற விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படஉள்ளது என்ற  சிறப்பு பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு பிரதமர் மற்றும் அவரது இல்லத்தில் அதிகாரப்பூர்வ முறையில் அவருடன் வசித்து வரும் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் கூறினார் அப்போது எதிர்க்கட்சிகளின் கேள்விக்குப் பதிலளித்தவர், ``பா.ஜ.க யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படவில்லை.


முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் இதுபோன்ற பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எஸ்பிஜி திருத்தமே சோனியா காந்தி குடும்பத்துக்கு எதிராகக் கொண்டு வந்ததாகப் பேசுகிறார்கள். உண்மை அதுவல்ல. சோனியா காந்தி குடும்பத்துக்கான பாதுகாப்பைத் திரும்பப் பெறவில்லை. அவர்களுக்கு Z ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அரசியல் கட்சியினருக்குப் பாதுகாப்பு வழங்க அரசு தயாராக இருக்கிறது. ஆனால், பிரதமருக்கு வழங்கும் அதே பாதுகாப்பை அரசியல் தலைவர்களுக்கு வழங்க முடியாது.


2015-ம் ஆண்டுக்குப் பிறகு ராகுல் காந்தி சிறப்பு பாதுகாப்புப் படையினருக்கு தெரிவிக்காமல் தெரிவிக்காமல் இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார், இந்தியாவில் 1,892 பயணங்களையும், வெளிநாடுகளுக்கு 247 முறையும் பயணம் செய்துள்ளார். அதேபோல் சோனியா காந்தி டெல்லியில் 50 முறையும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு 13 முறையும், வெளிநாடுகளுக்கு 29 முறையும் சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு இல்லாமல் சென்றுவந்துள்ளார்.


Next Story