Top
undefined
Begin typing your search above and press return to search.

சிட்கோ நிலத்தை போலி ஆவணங்கள் மூலம், மனைவி பெயரில் அபகரித்த தி.மு.க எம்.எல்.ஏ கோர்ட்டில் ஆஜர்!

சிட்கோ நிலத்தை போலி ஆவணங்கள் மூலம், மனைவி பெயரில் அபகரித்த தி.மு.க எம்.எல்.ஏ கோர்ட்டில் ஆஜர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Nov 2019 12:33 PM GMT


சென்னை சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் மா.சுப்பிரமணியன். இவர் சென்னை மாநகர மேயராக இருந்தவர்.


இவர், கிண்டி தொழிலாளர் காலனியில் உள்ள எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கப்பட்ட சிட்கோ நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து தனது மனைவி காஞ்சனா பெயரில் அவதரித்துள்ளார்.


இதுதொடர்பான வழக்கு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று (28.11.2019) ஆஜராகுமாறு மா.சுப்பிரமணியனுக்கும், அவரது மனைவி காஞ்சனாவுக்கு கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.


இதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டை கோர்ட்டில் மா.சுப்பிரமணியனும், அவரது மனைவி காஞ்சனாவும் இன்று நேரில் ஆஜரானார்கள்.


Next Story