Top
undefined
Begin typing your search above and press return to search.

சுழற்றியடிக்கும் அமித் ஷா! காஷ்மீரில் கல் வீசி தாக்குதல் நடத்தியவர்கள் எல்லாம் கப் சிப்! கண்டபடி கதறும் பிரிவினைவாதிகள்!

சுழற்றியடிக்கும் அமித் ஷா! காஷ்மீரில் கல் வீசி தாக்குதல் நடத்தியவர்கள் எல்லாம் கப் சிப்!  கண்டபடி கதறும் பிரிவினைவாதிகள்!

MuruganandhamBy : Muruganandham

  |  28 Nov 2019 12:48 PM GMT


காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு 40 முதல் 45 சதவிகிதம் வரை கல் வீச்சு தாக்குதல் குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தான் உளவுத்துறையாலும், பயங்கரவாதிகளாலும் மூளை சலவை செய்யப்பட்ட காஷ்மீர் இளைஞர்கள் நெடுங்காலமாக பாதுகாப்பு வீரர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி வந்தனர். இதில் காஷ்மீர் பெண்களும் அடங்குவார்கள்.


கல் வீசி தாக்குதல் நடத்துபவர்களுக்கு பிரிவினைவாதிகளும், பயங்கரவாதிகளும் ஊதியம் போல ஒரு தொகையை கொடுத்து மென்மேலும் அவர்களை ஊக்கப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பாஜக அரசு, இதுவரையில் எந்த அரசும் மேற்கொள்ளாத துணிச்சலான நடவடிக்கையை காஷ்மீர் விவகாரத்தில் எடுத்தது.


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்ட பிரிவை நீக்கியது. இதன் விளைவாக தற்போது 45 சதவிகிதம் வரை கல்வீச்சு தாக்குதல் குறைந்துள்ளது. மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் காஷ்மீரில் தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.


ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. அங்கு இணைய சேவை வழங்குவது தொடர்பாக அம்மாநில அதிகாரிகளால் முடிவெடுக்க முடியும். எனவே பாதுகாப்பு நலன் அடிப்படையில், அங்குள்ள அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.


ஜம்மு-காஷ்மீரில் போதுமான அளவு மருத்துவ
சேவை மற்றும் மருந்துகள் கிடைக்கின்றன. குறிப்பாக தேவைக்கு ஏற்ப
ஒவ்வொருவருடைய சொந்த இடங்களுக்கே வாகனத்தில் சென்று மருத்துவ சேவை வழங்கும்
திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. பொது சுகாதார சேவைகளை அப்பகுதி நிர்வாகம்
தொடர்ந்து கவனித்து வருகிறது.


பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல்
எரிவாயு மற்றும் அரிசி கிடைப்பது போதுமான அளவில் உள்ளது. அனைத்து
லேண்ட்லைன் வகை தொலைத்தொடர்புகளும் பயன்பாட்டில் உள்ளன. இம்முறை 22 லட்சம்
மெட்ரிக் டன் ஆப்பிள்கள் உற்பத்தி செய்யப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.


அனைத்து உருது மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள், வங்கி சேவைகள் அனைத்தும் முழுமையாக செயல்படுகின்றன. அனைத்து அரசு அலுவலகங்களும் அனைத்து நீதிமன்றங்களும் செயல்பாட்டில் உள்ளது. தொகுதி மேம்பாட்டு கூட்டமைப்புத் தேர்தல்கள் நடத்தப்பட்டு, 98.3 சதவீத வாக்குப்பதிவு பதிவு நடைபெற்றுள்ளது.


ஹிந்து, பௌத்தம், சீக்கியர், சமணர்,
கிறிஸ்தவர், பார்சி அகதிகள் குடியுரிமைப் பெற வேண்டும் என்பதால்தான்
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தேவைப்படுகிறது. இதன்மூலம் பாகிஸ்தான்,
வங்கதேசம் அல்லது ஆப்கானிஸ்தானில் மத அடிப்படையில் பாகுபாடுகளுக்கு உள்ளாகி
தஞ்சமடையும் அகதிகளால் இந்திய குடியுரிமை பெற முடியும்.


என்ஆர்சி-யால் ஹிந்துக்கள் அல்லாத மாற்று
மதத்தினர் பாதிப்புக்குள்ளாகும் விதிமுறைகள் எதுவும் கிடையாது. மதங்களுக்கு
அப்பாற்பட்டு தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) நாடு முழுவதும்
மேற்கொள்ளப்படும். இதில் இந்தியாவைச் சேர்ந்த அனைத்து குடிமக்களும் இடம்
பெறுவார்கள்.


என்ஆர்சி பதிவு என்பது சட்ட விதிகளுக்கு
உட்பட்டு மட்டுமே நடைபெறும். எனவே மதத்தின் அடிப்படையில் பிரிவினை
ஏற்படுத்தப்படும் என்பது போன்ற பொய் பரப்புரைகள் குறித்து யாரும் கவலைப்பட
வேண்டாம்.


வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தீர்ப்பாயத்தில் முறையிட உரிமை உண்டு. அசாம் முழுவதும் இந்த தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும். தீர்ப்பாயத்தை அணுக எந்தவொரு நபரும் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் வழக்கு மற்றும் வழக்குரைஞருக்கான முழுச்செலவையும் அசாம் அரசு ஏற்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


Next Story